பறக்கும் விமானத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை !

Advertisement

இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.பிரபு ராமமூர்த்தி லாஸ்வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்றார். அவருடன் அவரது மனைவியும் உடன்சென்றுள்ளார். ஆனால் விமானத்தில் ராமமூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் தனித்தனியாக இருக்கைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரபு ராமமூர்த்தி தனதருகில் இருந்த 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் விமான ஊழியர்களிடம் புகார் செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், எனது ஆடைகள் அகற்றப்பட்டது. நான் தூங்கிக்கொண்டு இருக்கும்போது அந்த மனிதர் எனது பேன்ட் மற்றும் சட்டை பட்டன்களை கழற்றியுள்ளார். அதன்பின்னர் எனது ஆடைக்குள் கையை நுழைத்தார் என தெரிவித்தார்.

இதையடுத்து, அமெரிக்கவாழ் இந்தியரான ராமமூர்த்தி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் கூறப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் ஜாமீன் இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆனால் தன்மீதான புகாரை ராமமூர்த்தி மறுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நான் மாத்திரை எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன். அதனால் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

Facebook Comments
Total Page Visits: 1 - Today Page Visits: 1