இன்ஸ்டாகிராம் டு வாட்ஸ்அப்!- குஷியில் நெட்டிசன்கள்

Advertisement

இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

சமூக வலைதளங்களில் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயன்பாட்டாளர்களுக்குத் தொடர்ந்து பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, இனி உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக மாற்றிக்கொள்ளும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வெளியிட உள்ளது.

வாட்ஸ்அப்பில் உள்ள எல்லா தகவல்கள் போன்றும் இந்த தகவலும் என்கிரிப்ட் செய்யப்படும் என்றும் தற்போது இந்தச் செயல்முறை சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் தனது பயன்பாட்டாளர்களுக்கு ஹாஷ்டேக் பின் தொடர்வதற்கான அம்சத்தை அப்டேட் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் அவர்களுக்குப் பிடித்தமான ஹாஷ்டேக்கைப் பின்தொடர முடியும்.

Facebook Comments
Total Page Visits: 7 - Today Page Visits: 1