ஜியோவின் புதுவருட புதிய பிளான்கள் ! கண்டிப்பாக ஷாக் ஆகுவீங்க !

Advertisement

தொலைத்தொடர்பு சந்தையில் நுழைந்தது முதலே பல ஆச்சர்ய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது ஜியோ. கடந்த 2016-ம் ஆண்டு சந்தையில் நுழைந்த ஜியோ தனது போட்டியாளர்களை தோற்கடிக்க ஏவிய அஸ்திரம் ‘இலவசம்’. தொடக்கத்தில் 4G டேட்டா மற்றும் கால்கள் என அனைத்துச் சேவைகளையும் இலவசமாகவே கொடுத்தது. இதன் காரணமாக மிக குறுகிய காலத்திலேயே ஜியோவால் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தது.

ஜியோவின் தாக்கம் ஒட்டுமொத்த மொபைல் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்த மற்ற நிறுவனங்கள் டேட்டா பிளான்களின் விலையைக் குறைத்தன. சில மாதங்களுக்குப் பிறகு ஜியோவும் படிப்படியாக கட்டண சேவைக்கு மாறியது, பிளான்களின் வேலிடிட்டி நாள்கள் குறைக்கப்பட்டன. அதன் பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தனது பிளான்களில் மாற்றம் செய்து வருகிறது ஜியோ. கடந்த முறை பிளான்களில் மட்டுமன்றி வேறொரு பெரிய மாற்றத்தையும் செய்திருந்தது. அதிவேக டேட்டா முடிந்தபின் உபயோகிக்கும் இன்டர்நெட்டின் வேகத்தை 128kbps லிருந்து 64kbps ஆக குறைந்திருந்தது.

இந்த வருடத்தில் முதல் முறையாக தனது பிளான்களை மீண்டும் மாற்றியமைத்திருக்கிறது. Jio Happy New Year 2018 Offer எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதன் மூலமாக முன்பிருந்த பிளான்களின் விலை மற்றும் டேட்டாவின் அளவில் மாற்றம் செய்திருக்கிறது ஜியோ.

JIO Happy New Year 2018 – அதிரடி ஆப்பர் | 50% Extra (From 9th JAN)

1 ஜி.பி பிளான்கள்

இந்த பிளான்களின் விலை முன்பு இருந்ததிலிருந்து 50 ரூபாய் விலை குறைக்கப்பட்டிக்கிறது.

ரூ.149 பிளான்

இந்த பிளான் இதற்கு முன்பு 199 ரூபாய். அது தற்பொழுது 149 ரூபாய்க்குக் கிடைக்கிறது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1 ஜி.பி அதிவேக டேட்டாவை பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாள்கள்.

ரூ.349 பிளான்

இந்த பிளான் மூலமாக 70 நாள்களுக்கு தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இதன் முந்தைய விலை ரூ.399

ரூ. 399 பிளான்

இதற்கு முன்பு 459 ரூபாயாக இருந்த இந்த பிளான் தற்பொழுது 399 ரூபாய்க்குக் கிடைக்கும். இதன் மூலம் தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவை 84 நாள்களுக்குப் பெறலாம்.

ரூ.449 பிளான்

இந்த பிளான் மூலமாக தினமும் 1 ஜி.பி அதிவேக டேட்டாவை 91 நாள்களுக்குப் பெற முடியும். இதற்கு முன்பு 499 ரூபாயாக இருந்த இதை 449 ரூபாயாக குறைத்திருக்கிறது ஜியோ.

1.5 ஜி.பி பிளான்கள்

இந்த பிளான்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக தினமும் வழங்கும் டேட்டாவின் அளவை அதிகப்படுத்தியிருக்கிறது ஜியோ.

ரூ.198 பிளான்

28 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 42 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ.398 பிளான்

70 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 105 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ. 448 பிளான்

84 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 126 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

ரூ.498 பிளான்

91 நாள்கள் வேலிடிட்டியைக் கொண்ட இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி அதிவேக டேட்டாவைப் பெற முடியும். இந்த பிளானின் மூலமாக மொத்தமாக 126 ஜிபி டேட்டாவைப் பெற முடியும்.

Credit -www.vikatan.com

ஜியோக்கு போட்டியாக களம் இறங்கிய ஏரோவாய்ஸ் ! ஆன்லிமிடெட் டேட்டா & வாய்ஸ் அறிவிப்பு !

மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO-mobile virtual network operator) நிறுவனமான ஏரோவாய்ஸ், இறுதியாக பொது மக்களுக்கு அதன் இலவச சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏரோவாய்ஸ் நிறுவனமானது சமீபத்தில் பிஎஸ்என்எல் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் எம்விஎன்ஓ (MVNO) சாப்ட் சேவையை அறிவித்தது.

கடந்த வாரம் நிகழ்ந்த நிகழ்வொன்றில், ஏரோவாய்ஸ் நிறுவனம் தனது சாப்ட் சேவையையும், பிஎஸ்என்எல் உடனான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முடிந்ததையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக, ஏரோவாய்ஸ் பாண்டிச்சேரி உட்பட தமிழ்நாடு / சென்னையில் அதன் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான விளக்க வீடியோ தமிழில் உங்களுக்காக

மேலும் இது தொடர்பாக செய்திகள் அறிய தொடர்ந்து கீழ் படியுங்கள் .

இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 17, 2017 முதல், அதன் மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO) சேவைகளை வழங்கத் தொடங்கியது. ஏரோவாய்ஸ் அதன் தேசிய சிம் கார்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இலவச சிம் கார்டு

ஏரோவாய்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை நெட்வொர்க் மூலம் ஏரோவாய்ஸ்-ன் குறிப்பிட்ட அளவிலான இலவச சிம் கார்டுகள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஆம், முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ போன்றே இலவச சிம் அட்டைகளை வழங்கி வருகிறது)

வரம்பற்ற இலவச குரல் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா

இந்த சேவை தொடக்கத்தின் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், ஏரோவாய்ஸ் நிறுவனம் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் வரம்பற்ற இலவச குரல், எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா வழங்குகிறது. இந்த இலவச சேவையானது, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பங்குதாரரான பிஎஸ்என்எல் நிபந்தனைகளுக்கு உட்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் உடன் இணைந்து

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டராகும் முனைப்பில், கடந்த ஜூன் 2017-ல் மாநில அரசு நடத்தும் நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து அட்பே (AdPay) நிறுவனம் இந்தியாவின் முதல் தேசிய மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆன ஏரோவாய்ஸ்-ஐ அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விளக்க வீடியோ தமிழில் உங்களுக்காக

மேலும் இது தொடர்பாக செய்திகள் அறிய தொடர்ந்து கீழ் படியுங்கள் .

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டராகும் முனைப்பில், கடந்த ஜூன் 2017-ல் மாநில அரசு நடத்தும் நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து அட்பே (AdPay) நிறுவனம் இந்தியாவின் முதல் தேசிய மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆன ஏரோவாய்ஸ்-ஐ அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. கூறப்படும் மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO) ஆனது அதன் குரல் மற்றும் தரவு சேவைகளை மட்டுமின்றி, பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதோடு சேர்த்து சர்வதேச டிராவலர் சிம் கார்டுகள், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) சிம் கார்டுகளையும் வழங்குகிறது.

சாப்ட் லான்ச் அறிமுக நிகழ்வில் ஏரோவாய்ஸ் (AEROVOYCE) நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவின்தொலைத் தொடர்புத் துறைக்கும் மற்றும் கட்டுப்பாட்டாளரான டிராய்-க்கும் நன்றியை தெரிவித்தது. உடன் குறிப்பிட்ட நேரத்தில் இத்தகைய சாதனையை அடைய உதவிய அதன் குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டது.

இது தொடர்பான விளக்க வீடியோ தமிழில் உங்களுக்காக

Credit – tamil.gizbot.com

உங்க மொபைல் ஹேங்கிங் ஆவதை தடுக்க வேண்டுமா? அப்போ இதை பாருங்க

இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.

இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் அதிகமாக இருக்கும் ஒரு விஷயம் தான்! நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை.

சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும். இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் ஆன மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Facebook Comments
Total Page Visits: 10 - Today Page Visits: 1