உடல் எடையைக் குறைக்கும் ஹெட் போன் (Video)

Advertisement

மோடியஸ் ஹெல்த் என்ற நிறுவனம் தனது புதுமையான ஹெட்போன் ஒன்றினை அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

பிளாஸ்டிக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் பயனர்களின் காதுகளில் பொருந்தும் இரண்டு ஹெட்போன் வயர்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போன் ஆனது பயனர்கள் மூளைக்கு எலெக்ட்ரிக் சிக்னல்களை அனுப்புவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த சிக்னல் ஆனது பயனர்கள் பசி உணர்வைத் தூண்டும் சில நரம்புகளைக் கட்டுப்படுத்தும் என்றும், அதனால் பயனர்கள் எளிதில் உடல் எடை குறைக்க முடியும் என்றும் மோடியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு பயனர்களின் மூளைக்கு சிக்னல்களை அனுப்புவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பெரும்பாலான நபர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மோடியஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 1