ரசிகர்களுக்கு எழுதிய கடிதத்தில் உருகிய நயன்தாரா

தமிழ் திரையுலகில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா இந்த ஆண்டு நடித்த அறம் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததோடு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. புத்தாண்டை முன்னிட்டு அவர் தனது ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. உங்களால் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அறம் திரைப்படம் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், “உங்களுடைய அன்பும் ஆதரவும் என்னை பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்லாமல் ‘அறம்’ போன்ற சமூக பொறுப்புணர்வுமிக்க படம் பண்ணத் தூண்டுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், திரைபிரபலங்கள், விமர்சகர்கள் ஆகியோராலேயே அறம் வெற்றியடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக அமையட்டும். உங்கள் அனைவரது உள்ளத்தில் எனக்கும் ஒரு சிறு இடம் அளித்ததற்கு நன்றி” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Read her full letter here:

To,

All my fans who have made this life of mine meaningful! I extend my sincere thanks and heartfelt wishes for a New Year which gives you all that you have ever wished for…!

You have made me feel blessed! You have made me believe that sincere and unconditional love exists.. Your love towards me has proved time and again that life is beautiful. You all have made me realise that no matter what, we should just keep working harder with utmost dedication and leave the rest to God…!

For all the love and support you have shown towards me, all I can do is work harder and be responsible to not only give you entertaining movies but also responsible films like Aramm.

I sincerely thank the print, television, social media, cinema personalities, reviewers & trackers for making Aramm what it is today.

This has been a wonderful year with full of love and positivity. Thank you all for making it possible for me again and again.

All I can say is…

I love you all and I’m here, only because of you all. Thank you once again for giving me a little space in your hearts.

Have a wonderful 2018…

Stay positive…

God Bless…

Love Always,

Nayanthara

Facebook Comments