அரசியல் படத்தில் களமிறங்கும் முடிவில் ரஜினி

ரஜினிகாந்த் அரசியல் பின்னணி படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டு கதை கேட்பதில் ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, ‘‘ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ளா ‘காலா’ திரைப்படப் பணிகளும் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து அடுத்து நடிக்க உள்ள படம் அரசியல் பின்னணி படமாக அமைந்தால் மக்களை நெருங்குவதற்கு மேலும் உதவியாக இருக்கும் என்பது அவரது கணிப்பு.

ஆகவே, 2.0, காலா படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக நடிக்கும் படம் அரசியல் பின்னணி களமாக இருக்கட்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதோடு இயக்குநர்கள் ஷங்கர், பா.இரஞ்சித் இருவரிடம் அதற்கு தகுந்தமாதிரி கதை இருக்கிறதா என்பதையும் அவர் கேட்டிருக்கிறார். விரைவில் சரியான அறிவிப்பு இருக்கும்’’ இவ்வாறு தெரிவித்தனர்.

Facebook Comments