கனடாவில் பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவாக்கிய கொலைக்காரர் (Video)

கனடாவைச் சேர்ந்த ஒருவர் 49 பெண்களைக் கொடூரமாகக் கொன்று அவர்களின் சடலத்தைப் பன்றிகளுக்கு உணவாகப் போட்டுள்ளதோடு, காவல் துறையினருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கனடாவில் அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து வெளியிடப்பட்ட ஆவணப் படம் ஒன்றில் அந்நாட்டைச் சேர்ந்த ஒருவர் 49 பெண்களைக் கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகப் போட்டுள்ளதோடு, காவல் துறையினருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த 68 வயதுடைய ராபர்ட் பிக்டோன் என்பவருக்கு வான்கூவரில் பன்றி பண்ணை சொந்தமாக உள்ளது. அங்கு அமைதியான வாழ்க்கை வாழ்வது போன்று பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

பாலியல் தொழிலாளர்கள் மற்றும் போதை மருந்து விற்பவர்கள் மூலம் பெண்களைத் தனது பண்ணைக்கு ராபர்ட் அழைத்து வருவார். அவர்களுக்கு பணம், மது போன்றவற்றை கொடுப்பதாக ஆசைகாட்டி பெண்களை கொடுமைப்படுத்தி இவர் கொலை செய்வார். இப்படி 49 பெண்களை அவர் கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களின் சடலத்தை பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு உணவாகவும், பின்னர் அந்த மனித மாமிசத்தைக் காவல் துறையினருக்கு விற்றும் வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2002இல் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருப்பதாக ராபர்ட் மீது புகார் கூறப்பட்ட நிலையில் அங்கு அதிகாரிகள் சோதனை செய்தபோது, கொலை செய்யப்பட்ட பெண்களின் பொருள்களும், உடல் பாகங்களும் கிடைத்தன. அதோடு இரண்டு பெண்களைக் கொலை செய்து அவர்களின் தலை, கை, கால்களைக் குளிரூட்டும் பெட்டியில் ராபர்ட் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராபர்ட் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கூறுகையில், 49 என்பது ராபர்டின் கணக்கில் பாதி என அதிர்ச்சி தகவலைக் கூறினார்கள்.

2001இல் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்த எலைன் ஆலன் என்பவர், 62 பெண்களைக் காணவில்லை என அப்போது புகார் அளித்திருந்தார். அதில் காணாமல்போன பெண்களில் 34 பேரை தற்போது வரை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையெல்லாம் வைத்து ராபர்ட்டின் கொலை எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

கசாப்பு கடைக்காரன் என அழைக்கப்படும் ராபர்ட் இன்று வரை கனடாவின் மோசமான தொடர் கொலைகள் செய்த நபர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Facebook Comments