உலகின் மிகச் சிறிய ஹார்டு டிஸ்க் இது தான்

Advertisement

பென் டிரைவ் வடிவிலான மிகச் சிறிய 1TB ஹார்டு டிஸ்க்கை sandisk நிறுவனம் அறிமுகம் செய்தது.

டிஜிட்டல் சேமிப்பு சாதனங்களான மெமரி கார்டு, பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் போன்றவற்றினைத் தயாரித்துவரும் நிறுவனமான சேன் டிஸ்க் நிறுவனம் தற்போது சிறிய அளவிலான 1 TB ஹார்டு டிஸ்க் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹார்டு டிஸ்க் அதிக தகவல்களை மிகச்சிறிய இடத்தில் சேமித்து வைக்கப் பயன்படுவதால் இதனை எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்ல இயலும்.

பென் டிரைவ் போல் வடிவம் கொண்டுள்ள இந்த புதிய ஹார்டு டிஸ்க்கினை ஆன்ட்ராய்டு மொபைல்களில் இணைத்துத் தகவல்களை எளிதில் பரிமாற்றிக்கொள்ள இயலும். இதில் USB-C போர்டு வழங்கப்படுள்ளதால் எளிதில் ஸ்மார்ட் போன்களுடன் இணைத்துக்கொள்ள இயலும். மேலும் இதில் தகவல் பரிமாற்றம் முன்பிருந்த USB-3.0 வை விடப் பல மடங்கு அதிவேகத்துடன் செயல்படும் என sandisk நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய கருவியின் வெளியீடு மற்றும் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Facebook Comments
Total Page Visits: 2 - Today Page Visits: 1