இலங்கையை வியக்க வைத்த திருமணம்! வியந்து போன விருந்தாளிகள்

Advertisement

இலங்கையில் பலரும் வியக்கும் வகையில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.பெருந்தொகை பணத்தை செலவிட்டு, ஆடம்பர ஹோட்டல்களில் திருமணங்கள் நடைபெறுவது வழமை.எனினும் லசித மற்றும் திலினி முனசிங்க தம்பதிகளுக்கு நடந்த திருமணம் அனைவரும் பேசும் அளவுக்கு பிரபல்யம் அடைந்துள்ளது.

வருகை தந்த அனைவருக்கும் மணமகன் மற்றும் மணமகளால் பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.பரிசு பொதியில், சீத்தா மரக்கன்று ஒன்றை தம்பதியினர் வழங்கியுள்ளனர்.சீத்தா மரக்கன்றினை கட்டாயமாக நாட்டுமாறு தம்பதியினர் அன்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இளம் தம்பதியினர் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வர்த்தக நோக்கம் காரணமாக காடுகளை அழித்து வரும் நிலையில், இந்த தம்பதியினரின் செயற்பாடு பலருக்கு முன்னூதாரணமாக உள்ளது.உலகளாவிய ரீதியில் காடுகளை அழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

Facebook Comments