உங்கள் இன்றைய ராசி பலன்-25/01/2018

Advertisement

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

பலவீனமான உடல் மனதை பாதிக்கும் என்பதால், சக்தியை மீண்டும் பெற முழு ஓய்வெடுங்கள். உங்களிடம் வலு உள்ளது, மனம்தான் குறைபாடு என்பதால், உங்கள் உண்மையான திறமையை நீங்கள் உணர வேண்டும். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். அறிவு தாகத்துக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். இன்று ஆபீசில் நாள் முழுவதும் நீங்கள் சிறிது மன கலக்கத்துடன் இருக்க கூடும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணையின் மேல் உங்களுக்கு இன்று சந்தேகம் வரக்கூடும். இதனால் உங்கள் இருவரின் அமைதியும் பாதிக்ககூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் தனிமை உணர்வில் இருந்து விடுபடுங்கள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வேலையில் நீங்கள் அதிகம் கவனமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் புறக்கணிக்கப்படும். காதலில் மூர்க்கத்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். உங்களின் பலங்களையும் எதிர்கால திட்டங்களையும் மறு-மதிப்பீடு செய்வதற்கான நேரம். உங்கள் துணையில் சின்ன சின்ன எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறினால் அதாவது அவருக்கு பிடித்த உணவை வாங்கி கொடுக்காத்து அல்லது அன்பான அணைப்பை தராத்து போன்ர விஷயங்கள் அவரை காயப்படுத்தும்.
 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் விருப்பத்தின்படி குழந்தைகள் நடக்க மாட்டார்கள் – அது உங்களை ஆத்திரம் அடையச் செய்யலாம். கட்டுப்படுத்தாக கோபம் வழக்கமாக எல்லோரையும் காயப்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்த்திடுங்கள். கோபம் அடைபவரையும் அது பாதிக்கும். ஏனெனில் அது சக்தியை வீணடித்து நியாயத்தைக் கண்டுபிடிக்கும் தன்மையைக் குறைக்கும். அது பிரச்சினையை பெரிதாக்கத்தான் உதவும். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். உங்களுடன் வாழ்பவர் உள்ளுடன் மிக்க மகிழ்ச்சியாக இருக்க மாட்டார் – அவரை திருப்திப்படுத்த நீங்கள் என்ன செய்தாலும் மகிழ்ந்திட மாட்டார். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். வேலையில் நல்ல வாய்ப்புகளைத் தேடி மேற்கொள்ளும் பயணம் பயன்தரும். அதை செய்வதற்கு முன்பு பெற்றோரிடம் அனுமதி பெறுங்கள். இல்லாவிட்டால், பிறகு அவர்கள் ஆட்சேபிக்கலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.

 

கடகம் ராசிபலன்:

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த மறு துவக்கம் செய்ய நல்ல நாள் முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. உங்கள் ஆரோக்கியம் மற்றும் எனர்ஜி இன்று ஆபீசில் உங்களுக்கு உதவாது. எனவே மன உறுதி அவசியம். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும்.

 

சிம்மம் ராசிபலன்:

குழந்தைகளுடன் இருப்பதால் ஆறுதலாக உணருங்கள். குழந்தைகளின் நோய் தீர்க்கும் சக்தி உங்கள் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி மற்ற குழந்தைகளுக்கும் உண்டு. அவர்கள் உங்கள் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்துவார்கள். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணைக்கு அடிகடி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம்.

 

கன்னி ராசிபலன்:

மனைவி உங்களை உற்சாகப்படுத்துவார். மற்றவர்களுக்காக நிறைய செலவு செய்ய விரும்புவீர்கள். கெட்ட பழக்கங்களால் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களிடம் இருந்து விலகியிருங்கள். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நிறைவேற்ற முடியும் என்ற உறுதி இருந்தால் தவிர வாக்குறுதி எதையும் தராதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்கள் துணைவருடன் மன அழுத்தம் மிக்க உறவு ஏற்படும். நீண்டகாலம் நீடிக்கும் அளவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படும்.

 

துலாம் ராசிபலன்:

வண்டி ஓட்டும் போது கவனமாக இருங்கள். பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். இன்று உங்கள் வீட்டிலும், வீட்டைச் சுற்றியும் சில பெரிய மாற்றங்களை செய்வீர்கள். மாலை நேரத்துக்கு ஸ்பெஷலாக ஏதாவது திட்டமிடுங்கள். முடிந்தவரை அதை ரொமாண்டிக்காக ஆக்குங்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்..

 

 

விருச்சிகம் ராசிபலன்:

ஓய்வில்லாத தன்மை உங்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தலாம். கொஞ்ச தூரம் நடந்து சென்று சுத்தமான காற்றை சுவாசித்து இதைப் போக்கிடுங்கள். உங்களின் பாசிடிவான சிந்தனை உங்களுக்கு அதிகமாக உதவி செய்யும். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வாழ்வில் முக்கியமானவர்களிடம் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதற்கு மிகவும் கஷ்டப்படுவீர்கள். தனிப்பட்ட விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இன்று நீங்கள் அபீசில் செய்ய போகும் வேலை வரும் காலத்தில் நல்ல பலனை உங்களுக்கு தரும். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.

 

தனுசு ராசிபலன்:

இன்றைய பொழுதுபோக்கில் விளையாட்டுகளும் வெளிப்புற நிகழ்ச்சிகளும் இருக்க வேண்டும். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். நண்பர்களை இழப்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகமாக தெரிவதால் விழிப்புடன் இருங்கள். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

உயர் நிலையில் இருப்பவரை சந்திக்கும்போது பதற்றமாகி நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். பிசினஸுக்கு முதலீட்டைப் போல நல்ல ஆரோக்கியம் இருப்பதும் முக்கியம். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். உங்கள் பிரச்சினை கடுமையாக இருக்கும் – ஆனால் உங்களின் வலியை உங்கலைச் சுற்றியுள்ளவர்களால் கவனிக்க முடியாது – ஒருவேளை அது தங்களின் பிரச்சினையில்லை என அவர்கள் நினைக்கலாம். காதலில் இறக்கங்களை எதிர்கொள்ள தைரியத்துடனும் உற்சாகமாகவும் இருங்கள். வேலையிடத்தில் ஒருவர் உங்கள் திட்டங்களை சிதைக்க முயற்சி செய்யலாம் – எனவே உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணித்திடுங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபமடையலாம்.

 

கும்பம் ராசிபலன்:

தகராறு செய்யும் நடத்தையை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் உறவுகளை நிரந்தரமாக பாதிக்கும். திறந்த மனது மற்றும் பிறரிடம் உள்ள தவறான கருத்தை கைவிடுவதால் இதை நீங்கள் வெற்றி கொள்ளலாம். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். தொடர்புகொள்ளும் நுட்பத்துக்கும், வேலைத் திறனுக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் முகத்தில் புன்னகை நீங்காத நாள். புதியவர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றுவர். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். இது ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது சில பிரச்சினைகளை ஆரம்பிக்கும் வேலையை செய்வதற்கான நாள் அல்ல. ஒருதலை மோகம் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் அலுவலக வேலை இன்று உங்கள் துணையின் நடத்தையால் பாதிப்படையும்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments
Total Page Visits: 5 - Today Page Visits: 1