பொலிஸ் நாயை கடித்துக் குதறிய வாலிபரால் பரபரப்பு (Video)

அமெரிக்காவில் உள்ள நியூகம்‌ஷயரை சேர்ந்த 2 வாலிபர்கள் தாங்கள் தங்கி இருந்த இடத்தில் துப்பாக்கியால் சுட்டனர். இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் அங்கு வந்தனர்.

அப்போது இருவரும் தப்பி ஓடி அங்குள்ள வாகன ட்ரெய்லரில் இருந்த துணி மூட்டைக்குள் பதுங்கி கொண்டனர். அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே போலீஸ் மோப்பநாயை அனுப்பி தேடினார்கள். அப்போது துணி மூட்டைக்குள் அவர்கள் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த நாய் அவர்களை கவ்வி பிடிக்க முயன்றது. இதில் கோபமடைந்த ஒரு வாலிபர் அந்த நாயை கடுமையாக தாக்கினார். இதனால் நாய் அவரை கடிக்க முயன்றது.

உடனே அந்த வாலிபர் நாயின் தலையை பிடித்து அதன் முகத்தில் சரமாரியாக கடித்து குதறினார். ஆனாலும் நாய் அவரை விடவில்லை. இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குற்றத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும், நாயை கடித்ததாகவும் 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Facebook Comments