சுவர்களுக்குள் இருப்பதை ஸ்கான் செய்து காட்டும் நவீன கருவி (Video)

Advertisement

சுவர்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் பைப்புகள், வயர்கள் ஆகியவற்றினைக் கண்டறியும் புதிய கருவியை Vayyaar நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இஸ்ரேல் நாட்டினைச் சேர்ந்த இந்த நிறுவனம் சுவர்களை ஊடுருவிச் சென்று பின்புறம் உள்ள வயர்கள் அல்லது பைப்களைக் கண்டறியும் புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது. இந்தப் புதிய கருவியானது சுவர்களின் பின்புறம் சுமார் 4 இஞ்ச தொலைவிலுள்ள பைப்களைக் கண்டறிய உதவியாக இருக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தக் கருவியை ஸ்மார்ட் போன்களுடன் இணைத்து வைத்துக்கொண்டு அதன் தகவல்களைப் பதிவிட்டுக்கொள்ள இயலும். இந்தப் புதுமையான கருவியானது வீட்டில் சவர் எழுப்பிய பின்னர் பைப்கள் அல்லது வயர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.10,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதைபொருட்களைக் கண்டறிவதற்கும் இந்தக் கருவி பயன்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Facebook Comments
Total Page Visits: 6 - Today Page Visits: 1