காதலரை மணந்த 18 மணி நேரத்தில் மரணம் (Video)

Advertisement

சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் சீக்கிரத்தில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும், காதலரைக் கரம் பிடித்து, 18 மணி நேரத்தில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான கனெக்டிக்கட்டைச் சேர்ந்த ஹீதர் மோஷர் என்ற பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.

அதேநாளில், அவருடைய காதலன் டேவிட் மோஷர், திருமணம் செய்துகொள்ளலாம் என இவரிடம் தெரிவித்துள்ளார். எனவே, டிசம்பர் 30ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், ஹீதர் மோஷரின் நிலைமை மிகவும் மோசமானதால் ஹார்ட்ஃபோர்ட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

புற்றுநோய் மூளை வரை பரவியதால், ஹீதர் சீக்கிரத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர் கூறினார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 22ஆம் தேதி அவர்களுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் ஹீதர் தன் காதலரைக் கரம் பிடித்தார். திருமணம் முடிந்த 18 மணி நேரத்தில் ஹீதர் உயிரிழந்தார்.

முன்பு திருமணம் செய்யக் குறிக்கப்பட்டிருந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று ஹீதருக்கு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரும் ஒன்றாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொண்டோம்.

ஆனால், நான் அவருக்கு குட்பை சொல்லித் தனியாக அனுப்பிவைக்கிறேன் என டேவிட் மோஷர் கண்ணீருடன் கூறினார்.

Facebook Comments
Total Page Visits: 6 - Today Page Visits: 1