பிரபல இதழ் அட்டைக்கு ரகுல் கொடுத்த சர்ச்சை போஸ்

Advertisement

கவர்ச்சி போஸ் கொடுப்பது இந்திப் பட உலகில் பெரிய விஷயம் கிடையாது என்று தெரிவித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தமிழிலும் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இவர் தமிழில் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில், சமீபத்தில் இவருடைய கவர்ச்சிப் படம் ‘மேக்ஸிம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை அட்டையில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதுகுறித்து sify இணையதளப் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “மேக்ஸிம் ஆங்கிலப் புத்தக அட்டைப் படத்தில் இடம்பெறும் வாய்ப்பு யாருக்கும் எளிதாகக் கிடைத்துவிடாது. அந்த இதழுக்கு நான் கவர்ச்சி போஸ் கொடுத்துவிட்டதாகத் தென் இந்தியாவில்தான் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், இந்திப் படவுலகில் இது பெரிய விஷயமே இல்லை. அய்யாரி இந்திப் படத்தில் நான் நடித்திருப்பதால்தான் இந்த வாய்ப்பு எனக்குத் தேடிவந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தி சினிமாவில் நடித்துவரும் தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே, பிரியங்கா சோப்ரா உட்பட பல நடிகைகள் இந்தப் பத்திரிகைக்குக் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார்கள். நடிகைகள் தங்கள் உடலை நேர்த்தியாக வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த இதுபோன்ற வாய்ப்புகள் பயன்படுகின்றன. பட வாய்ப்புக்காக இதுபோன்று போஸ் கொடுக்கவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Facebook Comments