உஷார்!! சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி விற்பனை !

பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை…பல வீடுகளில் மதிய உணவே பிரியாணியாகத்தான் இருக்கும்…. நம் அன்றாட வாழ்கையில் பிரியாணியும் ஒரு அங்கமாக மாறிபோய் உள்ளது.பிறந்தநாள் விழா, திருமண நாள் விழா, காதுகுத்து விழா போன்ற எந்த விழாவானாலும் பிரியாணி இன்றியமை யாததாகி வருகிறது.பிரியாணியில் எத்தனையோ வகை….. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வான்கோழி பிரியாணி, காடை பிரியாணி, இறால் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி, ராவுத்தர் தலப்பாகட்டு பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி.

இப்படி எத்தனையோ பிரியாணிகளை பார்த்திருக்கிறோம்… சுவைத்திருக்கிறோம்…. ஆனால், பூனை பிரியாணி….. கேள்விப் பட்டிருக்கிறீர்களா… சாப்பிட்டிருக்கிறீர்களா….. யாருமே இல்லை என்றுதான் சொல்லுவோம்…ஆனால், ரோட்டோர கடைகளில் பிரியாணி சாப்பிடுபவராக இருந்தால்…. பூனைகறி பிரியாணியும் சாப்பிட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது….

சென்னையில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி விற்பனை

சென்னை ஆட்டுக்கறியுடன் பூனை கறி பிரியாணி விற்பதாக எழுந்துள்ள புகார் அசைவ பிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் பலர் சாலையோர கடைகளில் சாப்பிடவும், சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிகளை வாங்கவும் பெரும் அச்சமடைந்தனர்.

பூனைக்கறி பிரியாணி

இந்நிலையில் அசைவ பிரியர்களை மீண்டும் பீதியடைய செய்யும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி போடப்படுவது தெரியவந்துள்ளது.

மாயமான பூனைகள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக பல இடங்களில் பூனைகள் நடமாட்டமே இல்லாமல் போனது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள் திடீரென மாயமாகின.

போலீஸ்க்கு ரகசிய தகவல்

இதில் வீட்டில் வளர்க்கப்பட்ட பூனைகளும் மாயமானது சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில் சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி எனக்கூறி பூனைக்கறி பிரியாணி பரிமாறப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த ஹோட்டல்களுக்கு சாப்பிட செல்வதை போல சென்ற போலீசார் பூனை சப்ளை செய்ய வந்த கும்பலை பொறி வைத்து பிடித்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சாக்குமூட்டையில் பூனைகள்

இதில் பூனை சப்ளை செய்த கும்பல் செங்குன்றத்தில் தங்கியிருக்கும் நாடோடிகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போலீசார் சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த 12 பூனைகள் பறிமுதல் செய்தனர்.அவற்றில் 4 பூனைகள் இறந்து போயிருந்தது. ஆட்டுக்கறி விலை கிலோ 600 ரூபாய்க்கு மேல் விற்பதால் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் பூனைக்கறியை வாங்க ஹோட்டல்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சாலையோர உணவகங்கள் பாதுகாப்பு அற்றவை என்பது தெரிந்தும், கூலிவேலை செய்பவர்களும், வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்கள், மற்றும் வீட்டில் சமைக்க முடியாதவர்கள் வேறு வழியில்லாமல் விலை குறைவு என்ற காரணத்ததால் சாலையோர கடைகளையே நாடுகிறார்கள்…

உழைப்பாளிகளின் வயிற்றிலும் அடிக்கிறார்கள் சாலையோர வியாபாரிகள்…

பொதுமக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்… இல்லையேல் பூனை, காககாக மட்டுமல்ல….. நாட்டில் அதிகமாக காணப்படும் நாய் கறி பிரியாணியும் விற்பனைக்கு வந்துவிடும் என்பதில் ஐயமில்லை…..பூனை கறியை நரிகுறவர்கள் சாப்பிடுவது அவர்களது வழக்கம். அதேபோல் பூனை கறி – இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாக, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் உள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய டாக்டர் ஒருவர், பூனைக்கறியும் மற்ற மாமிசம் போன்றது தான். நாம் அதை சாப்பிட்டு பழகவில்லை. அதனால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம். அவ்வளவுதான். வெளிநாடுகளில் பாம்பு கறி, தேள் கறி போன்ற புளு பூச்சிகளை எல்லாம் சாப்பிடுகிறார்கள்….ஆனால் வியாபாரி ஒருவர் நுகர்வோரை ஏமாற்றுவது தண்டனைக்குறிய குற்றம் என்றார்.

Total Page Visits: 97 - Today Page Visits: 1