அட்டகாசமான தானியங்கி கார்களை தயாரித்த கூகுள் பொறியியலாளர்கள் (Video)

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர்கள் இருவர் தானியங்கி கார் ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

தானியங்கியாகச் செயல்படும் வாகனங்களைத் தயாரிக்க உலகில் பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்துவருகின்றனர்.

அதில் கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆனால் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் அதிகாரபூர்வ வெளியீடு வரவில்லை.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு பொறியாளர்கள் புதிய தானியங்கி கார் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

கூகுள் முன்னாள் பொறியாளர்கள் இருவர் nuro என்ற பெயரில் புதிய நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் இந்த காரினை கண்டறிந்துள்ளனர்.

ஆனால் மற்ற நிறுவனங்களை காட்டிலும் வித்தியாசமான முயற்சியை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் மற்ற நிறுவனங்கள் தானியங்கியாகச் செயல்படும் டாக்ஸிகள், பேருந்துகள் போன்றவற்றினை வடிமைத்துவரும் நிலையில், Nuro நிறுவனம் பொருட்களைக் கொண்டுசெல்லும் தானியங்கி கார்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

கேமராக்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டு இந்த கார் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

பெயர் பலகைகளை கண்டதும் அதனை அறிந்துகொண்டு செயல்படும் திறனும், வாகனங்களைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையிழும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Total Page Visits: 123 - Today Page Visits: 1