கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசயிக்கதக்க மாற்றங்கள் !

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளமை தோற்றம்

கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

பருக்கள்

பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

சரும பாதுகாப்பு

கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமில்லை ,இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

அழகான சருமம்

எப்போது சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்ஸின்களை முற்றிலும் போக்கும் திறன் கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.

சரும புற்றுநோய்

சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைந்து, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அத்தகைய தாக்கத்தை தடுத்து, சருமத்திற்கு சரியான பாதுகாப்பை
கிரீன் டீ கொடுக்கும்.

எடை குறைவு

கிரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை சரிசெய்யும். அதாவது, கிரீன் டீ உண்ணும் உணவை சரியாக செரிமானமடைய வைத்து, சாப்பிட வேண்டிய நேரத்தில் மட்டும் சாப்பிட வைக்கும். இதனால் தான் கிரீன் டீ குடித்தால், உடல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.

முடி உதிர்தல்

நீண்ட நாள் பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். இத்தகைய பிரச்சனைக்கு கிரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் கிரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் குறைக்கும் .

கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Facebook Comments