பிரியா வாரியருக்காக காத்திருக்கும் தலைமை ஆசிரியர்

Fifteen Minutes of Fame என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அது இந்த காலத்தில் 50 Megabytes of Fame என மாறிவிட்டது. 50 MB அளவில் அப்லோடு செய்யப்பட்ட ஒரு பாடலின் டீசர், பிரியா பிரகாஷ் வாரியருக்கு இவ்வளவு பெரிய புகழைக் கொடுத்திருக்கிறது. பாடல் ரிலீஸாகி நாட்கள் கடந்துவிட்டாலும், அவர்மீது அன்பைத் தொடரும் உள்ளங்கள் இறங்கிவருவதாக இல்லை. சுமார் முப்பத்து நான்கு லட்சம் இன்ஸ்டாகிராம்வாசிகளால் தொடரப்படுகிறார் பிரியா. இவரை இனி எப்போது காண்போம் என ஆசையுடன் காத்திருப்பவர்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது தலைமை ஆசிரியரும்தான்.

திரிச்சூரிலுள்ள விமலா கல்லூரியில் பி.காம். படித்துவருகிறார் பிரியா. அந்தக் கல்லூரியின் தலைமை ஆசிரியரான மரியத்தே ஏ.தெரட்டில் பிரியாவைக் காணக் காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். “கடைசியாக, படத்தில் நடிப்பதற்கு அனுமதி கேட்டுப் பெற்றோருடன் என்னைப் பார்க்க வந்தாள் பிரியா. அதிகம் வகுப்புகளை விட்டுவிட வேண்டாம், கல்லூரி நிர்வாகம் அட்டண்டென்ஸை கவனிக்கும் என்ற அறிவுரையுடன் அனுப்பினேன். சில மீட்டிங்குகளில் இருந்ததால் பிரியாவுக்குக் கிடைத்த புகழ் எனக்குத் தாமதமாகத்தான் தெரியவந்தது” என்று கூறியதுடன் “என்னுடைய வாழ்த்தை மெஸேஜ் மூலமாகத் தெரிவித்திருக்கிறேன். நேரில் பார்க்க வேண்டும் என்று அழைத்திருக்கிறேன். பிரியா பிசியாகிவிட்டது தெரியும். எனவே, நேரம் கிடைக்கும்போது வரச் சொல்லியிருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜூலை மாதம்தான் பிரியா நடித்துள்ள ‘ஒரு அதார் லவ்’ திரைப்படம் ரிலீஸ் என்பதால், ஒவ்வொரு நாளும் எப்போது ஃபோட்டோ போஸ்ட் செய்வார் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவ்வப்போது Refresh செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர் டீனேஜ்கள். குஷி படத்தில் எஸ்.ஜே. சூர்யா மும்தாஜுக்கு ஒரு அறிமுகக் காட்சி வைத்திருப்பாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது.

Total Page Visits: 117 - Today Page Visits: 1