வீட்டு ஜன்னலில் இத ஒட்டி இருந்தால் திருட ப்ளான் ரெடினு அர்த்தம்! உஷார் மக்களே

வட இந்தியாவில் இருந்து புரிந்து தென் மாநிலங்களில் தங்களுடைய வியாபாரத்தை செய்து வரும் பலரும் திருட்டு சம்பவம், வழிப்பறித்தல்,குழந்தை கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.அதிலும் குறிப்பாக, குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் கையாளும் முறையை கண்டால்,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடு வீடாக சென்று பெட்ஷீட்,ஆடைகள்,கம்பளி விற்பது போன்று செயல்பட்டு,எந்தெந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்….எப்படி பட்டவர்கள்…குழந்தை உள்ளதா?எத்தனை வயது குழந்தை..? இது போன்று பல விஷயங்களை நோட்டம் கண்டு விடுகின்றனர்.

இதற்கு அடையாளமாக, எந்தெந்த வீட்டில் குழந்தை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளும் வகையில், வீட்டு ஜன்னலில் ஒரு சின்ன துண்டை அடையாளத்திற்காக ஒட்டி விடுகின்றனர்.

பின்னர் அடையாள துண்டை,மற்றவர்களும் சைகையாக பயன்படுத்திக்கொண்டு தருணம் பார்த்து குழந்தைகளை கடத்துவதும்,மற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தற்போது நாகர்கோவிலில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே,நம் வீட்டு பிள்ளைகளும் பாதுகாப்பாக இருக்க,தெரியாத இது போன்ற நபர்களை வீட்டினுள் சேர்க்காமல் இருப்பது நல்லது என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Tamil Funny Talk – RJ Balaji Vs Chennai City Girl

Total Page Visits: 114 - Today Page Visits: 1