4 மாத மகளை இரண்டாகப் பிளந்து மஜிக் செய்த தந்தை: வைரலாகும் வீடியோ !

அமெரிக்காவை சேர்ந்த ஜஸ்டின் ப்லாம் என்பவர் மேஜிக் தொழில் செய்துவருகிறார். இவருக்கு ஒரு 4 மாத பெண் குழந்தை உள்ளது.

அவர் ஒரு ஆபத்தான மேஜிக் செய்வதற்காக அந்த குழந்தையை பயன்படுத்தியுள்ளார். அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதை வைத்து மேஜிக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இரண்டு புத்தகங்களை எடுத்து அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் பிளவு செய்தது போல் செய்தார்.

என்ன ஆச்சரியம் என்றால் அந்த குழந்தை இரண்டாக பிளந்தது. மேலும் அந்த குழந்தை இரண்டாக துண்டிக்கப்பட்ட பிறகும் சிரித்து கொண்டிருந்த காட்சிகளையும் படம் பிடித்தார்.

இதை பேஸ்புக்கில் பதிவு செய்தார். அதை பார்த்து சுமார் 14.3 கோடி பேர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த மேஜிக்கை எப்படி செய்திருப்பார் என அனைவரும் திகைத்தனர். இந்த மேஜிக் குறித்து பார்வையாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதில் குழந்தை வைக்கப்பட்ட டேபிளின் கீழ் பகுதி கண்ணாடி என்றும் அது குழந்தையின் முழு உடலை மறைத்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.

ஒரு சிலர் குழந்தையின் உடலை தனியாகவும் மார்பு , தலை, தோள் பட்டை பகுதியை தனியாகவும் காட்டும் வகையில் டேபிள் அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

மொத்த காட்சிகளையும் ஜஸ்டினின் கேமரா படமாக்கவில்லை அவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று சிலர் கூறியுள்ளனர்.

குழந்தையின் கால்களை பிங்க் நிற கம்பளி கொண்டு ஜஸ்டின் மறைத்திருக்கலாம் என்றும்

குழந்தை இரண்டாக பிளவுப்பட்ட போட்டோவை புத்திசாலித்தனமாக ஜஸ்டின் எடிட் செய்துள்ளார் என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

Facebook Comments