நந்திதாவின் புதிய கவனம்

உள்குத்து படத்துக்குப் பிறகு வணங்காமுடி, நெஞ்சம் மறப்பதில்லை படங்களில் நடித்துள்ள நந்திதா, அந்தப் படங்கள் வெளியாவதில் தாமதமாவதால் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சதீஷ் வேகஸ்னா இயக்கும் படம், ஸ்ரீனிவாசா கல்யாணம். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நந்திதா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தில் ராஜு தயாரிக்கிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், வம்சி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் அவர் நடிப்பதால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளார். இதனால் அந்த வாய்ப்பு நந்திதாவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நிதினுக்கு ஜோடியாக எக்கடிக்கி பொத்தவு சின்னவாடா என்ற படத்திலும் நந்திதா ஜோடியாக நடித்திருந்தார்.

குடும்பத்துடன் பார்க்கக்கூடிய வகையில் உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Total Page Visits: 66 - Today Page Visits: 1