இணையத்தை கலக்கும் இந்த ப்ரியா பிரகாஷ் யார் ?

தமிழ்நாட்டில் மலையாள நடிகைகள், பெண்கள் மீதான தாக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது போலிருக்கிறது. நடிகைகளில் மலையாள நடிகையான நயன்தாரா நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.யு டியூப் பாடல்களில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெர்லி இருக்கிறார். அடுத்து ஒரு அடார் லவ் படத்தின் நாயகிகளில் ஒருவரான பிரியா பிரகாஷ் வாரியர் வந்துவிட்டார்.ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். உமர் லுலு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் பாடியுள்ள மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் சில தினங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியிடப்பட்டது.

அந்தப் பாடலில் ஒரு இடத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் இரண்டு புருவங்களையும் உயர்த்தி, உயர்த்தி காட்டியது ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்துவிட்டது.இப்போது அந்தப் பாடல்தான் யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.உடனே பிரியா பிரகாஷ் வாரியர் யார் என்று சமூக வலைத்தளங்களில் தேட ஆரம்பித்து அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டடேயிருக்கிறது. கூடவே பல பேக் ஐடிக்களும் உருவாகி வருகின்றன.

18 வயதே பிரியா வாரியர் தற்போது கேரளாவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.அவரைக் கல்லூரியில் பார்த்து அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். சீக்கிரமே அவரை தமிழ் சினிமா பக்கம் அழைத்து வந்துவிடுவார்கள்.

கடந்த சில தினங்களாக தனுஷ் நடித்த த்ரீ படத்தின் “இதழில் ஒரு ஓரம்” பாடலின் பின்னணி இசைக்கு, பள்ளி பயிலும் மாணவ, மாணவி இருவர் கண் பாஷையில் காதலித்துக் கொள்வது போன்ற வீடியோ பதிவு வேற லெவல் டிரெண்ட் ஆகிவருகிறது. அந்த பெண்ணின் பெயர் என்ன? அந்த வீடியோ பதிவின் உண்மையான வடிவம் எந்த படத்தினுடையது என்று எந்த செய்தியும் அறியாமல் அதை வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக தளங்கள் அனைத்திலும் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவை சேர்ந்த அந்த பெண் இப்போது தமிழகத்தில் மட்டுமின்றி ஆல் இந்தியா ஃபேமஸ் ஆகியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கான் உட்பட பல முன்னணி செய்தி ஊடகங்களும் அந்த பெண்ணை பற்றிய செய்திகளை வைரலாக பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த வருடம் வெளியாகவிருக்கும் ஒரு அதார் லவ் (Oru Adaar Love) என்ற படத்தில் வரும் பாடல் வீடியோ தான் இது. “மாணிக்யா மலராய பூவி” என்ற பாடலில் இந்த இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சரியாக 01.30 – 01.50 என்ற இடைவெளியில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர் என்ற இந்த இளம் பெண்ணுடன் நூரின் ஷெரீப் என்ற மிஸ் கேரளா ஃபேஷன் மற்றும் ஃபிட்னஸ் 2017 பட்டம் வென்ற பெண்ணும் நடிக்கிறார்.

ஒரே பாடலின் மூலம் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ். இந்தியா முழுவதும் ப்ரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங்.இந்நிலையில் ப்ரியா அந்த பாடலில் மிகவும் அழகாகவுள்ளார் என ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்க, மறுப்பக்கம் ஒரு சிலர் ப்ரியாவிற்கு எதிராகவும் கிளம்பியுள்ளனர்.ப்ரியா மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு, இது தான் உண்மையான ப்ரியா முகம் என்று கலாய்த்தும் வருகின்றனர்.

ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து தற்போது தன்னுடைய சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரேஷனால் மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து சென்று விட்டார், இதனால் ட்விட்டர், பேஸ்புக், யூ ட்யூப் என அனைத்து சமுக வலைத்தளங்களிலும் இவர் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.இவரை ரசிகர்கள் பலருக்கும் பிடித்து விட்டதால் அவரது ஐ.டி-களை தேடி தேடி பின்பற்றத் தொடங்கி வருகின்றனர். ஒரே நாளில் இவரை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பேர் பின் தொடர தொடங்கியுள்ளனர். இதனால் அவரை பேட்டி எடுக்க பல பத்திரிக்கை நிறுவனங்கள், யூ ட்யூப் சேனல்கள் தயாராக உள்ளன.

இவரின் அழகிய படங்கள் …

படம் #1

படம் #2

படம் #3

படம் #4

படம் #5

படம் #6

படம் #7

படம் #8

படம் #9

படம் #10

Total Page Visits: 132 - Today Page Visits: 1