உலகில் முதன்முறையாக அறிமுகமான தானியங்கி வாகனம் (Video)

துபாயில் தானியங்கி முறையில் செயல்படும் புதிய வாகனம் ஒன்றை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

துபாயில் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஒரே நேரத்தில் 10 நபர்களைச் சுமந்துகொண்டு தானியங்கி முறையில் செல்லும் வாகனம் Autonomous Pods என்ற ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தைப் பயனர்கள் டாக்ஸி போல் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாகனமானது தனித்தனியே கார்கள் போல் செல்லும் வசதியுடனும், அதே நேரத்தில் ஒன்றாக இணைந்து பேருந்து போல் செல்லும் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயனர்களில் இதில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை பயணம் செய்துகொள்ள இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 10 முறை பயனர்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்ப வாகனம் குறித்த வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புதிய முயற்சி பயணிகள் மத்தியில் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகில் முதன்முறையாக இந்தத் தானியங்கி வாகன முறையை துபாய் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 94 - Today Page Visits: 1