லண்டனில் தமிழர்களின் கழுத்தை அறுப்பேன் என்று கூறிய இராணுவ அதிகாரிக்கு நடந்த கதி ? நடந்தது என்ன ?

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து . கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ அதிகாரியை நாடு கடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை என்பவரையே , பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும் , நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் .

லண்டனில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர் .இதுதொடர்பாக அவர்கள் , தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் .அதில் , இந்த நாட்டில் விருந்தினராக , அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ , அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும் , ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வெளியான அதிர்ச்சி உண்மை ..!

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மைமற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ளஅறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில்இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின்கட்டளை அதிகாரியாகபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில்குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கழுத்தை அறுப்போம் என மிரட்டல்

அவர்களுடன் வந்த பிரியங்கா பெர்னாண்டோ என்ற ராணுவ அதிகாரி தமிழர்களைப் பார்த்து கழுத்து அறுத்திடுவோம் என மூன்று முறை சைகை காட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாதுகாப்பு ஆலோசகர்

இத்தகைய வன்மம் வாய்ந்த உண்மையாக சிங்கள முகத்தைக் காட்டிய ராணுவ வெறிபிடித்த அதிகாரியை லண்டனில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என இங்கிலாந்து எம்.பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவியில் இருக்கிறார் பெர்னாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது,

இறுதி போரில் தமிழ் மக்களை படுகொலை செய்தவரே இந்த பிரியங்க பெர்னான்டோ!

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்!

Facebook Comments