உங்கள் இன்றைய ராசி பலன்-04/02/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க ரெட் ஒயின் சாப்பிடலாம். அது மேலும ரிலாக்ஸ் பண்ணும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். நீங்கள் கூடுதல் தாராளமாக இருந்தால் – நெருக்கமானவர்கள் உங்களிடம் வரம்புமீறி சாதக நிலை எடுப்பர். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் துணையின் கண்டிப்பான பேச்சால் இன்று நீங்கள் வருத்தப்படுவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

சின்ன விஷயங்கள் மனவில் கவலையை ஏற்படுத்த அனுமதிக்காதீர்கள். அவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம். மனைவியுடன் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிக நல்ல நாள். ஒரு குடும்பத்தில் உறவில் இருவருமே முழுமையாக அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். ரகசிய விவகாரங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். அதிகம் செலவானதால் உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

 

கடகம் ராசிபலன்:

ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து நச்சரிப்பதால் குழந்தையின் நடத்தை பாதிக்கும். குழந்தையை காப்பாற்ற நீங்கள் தள்ளி இருப்பதுதான் இப்போதைய தேவையாகும். இன்று உங்கள் காதல் மலர்ந்து நீங்கள் என்ன நல்லது செய்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். இன்பச் சுற்றுலா திருப்திகரமாக அமையும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்களுக்கு நல்ல நேரம் காத்திருப்பதால் உற்சாகமாக இருங்கள். உங்களுக்கு கூடுதல் சக்தியும் கிடைக்கும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் – உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். ரொமான்சுக்கு நல்ல நாள் ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். குழப்பங்களோ அல்லது அலுவலக பாலிடிக்சோ எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் ஆளுமை செலுத்துவீர்கள்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் பிரச்சினையை சமாளிக்க நண்பரின் உதவியை நாடுங்கள். மறந்துவிட்டு பழையதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் உங்கள் மன மற்றும் உடல் சக்திதான் வீணாகும். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் – எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். உங்களை கீழே இழுத்துவிட முயற்சிக்கும் நபர்களைக் கையாள்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்! பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நால் முழுவது குதூகலமாக இருக்கும்.

 

துலாம் ராசிபலன்:

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். பணம் பண்ண புதிய வாய்ப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம். வீட்டில் ரிப்பேர் வேலையை முடிப்பது அல்லது நண்பர்கள் ஒன்று கூடுவதால் பிசியாக இருப்பீர்கள். தனிப்பட்ட உறவுகள் சென்சிடிவானவை மற்றும் முக்கியமானவை பேசும்போது ஒரிஜினலாக இருங்கள், நடிப்பதால் எதுவும் கிடைக்காது. உங்களை சிறிது தர்ம சங்கடமான நிலைக்கு இன்று உங்கள் துணை தள்ளக்கூடும், ஆனால் பிறகு அது உங்களது நன்மைக்கே என்று உணர்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

இன்று உங்களை எரிச்சலடையச் செய்யும், அசவுகரியமாக்கும் வகையில் பல டென்சன்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவர். ஆனால் உங்களிடம் ஏதாவதுஉதவியை எதிர்பார்ப்பார்கள். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக சிறந்த விஷயத்தை உங்களுக்கு அளிக்க போகிறது. சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். இன்று ரோஜாக்கள் மேலும் சிவப்பாக தோன்றும், வயலெட் நிறம் மேலும் நீலமாக தோன்றும் இவை அனைத்தும் உங்களுக்கு ஏறி உள்ள காதல் ஜுரத்தினால் தான்.

 

தனுசு ராசிபலன்:

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள் – அவர்கள் நெருக்கடியில் இருக்கலாம், உங்களின் அன்பும் புரிதலும் அவர்களுக்குத் தேவைப்படலாம். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். இன்று, உங்கள் துணை ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுக்கு உதவி புரிவார்.

 

மகரம் ராசிபலன்:

ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்கள் வீட்டைச் சுற்றி உடனடியாக சில சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று, உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி உங்களை பற்றி அவர் நினைக்கும் அத்தனை விஷயங்களையும் பழைய விஷயங்களையும் ஆனந்தமாக நினைவு கூர்வார்.

 

கும்பம் ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். ஆனால் நீங்கள் நேசிப்பவர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க நாக்கை கட்டிப் போடுங்கள். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் திருமண வாழ்வை பாதித்துவிடும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். உங்கள் துணை இன்று மோசமான மூடில் இருப்பது போல் தெரிகிறது.

 

மீனம் ராசிபலன்:

மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். உங்கள் அன்புக்குரியவர் இல்லாததால் மனம் ஏங்கும். உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடனும் சார்மிங்காகவும் இருங்கள். உங்கள் சார்மிங் மந்திரத்தின் ரகசியம் மிக சிலருக்கு மட்டுமே தெரியும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments