உங்கள் இன்றைய ராசி பலன்-10/02/2018

[sm-youtube-subscribe]

மேஷம் ராசிபலன்:

குடும்பத்திற்காக உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்வீர்கள். ஆனால் அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருக்க வேண்டும். இன்று வெறுமனே உட்கார்ந்திருக்காமல் – உங்கள் வருமான சக்தியை மேம்படுத்தக் கூடிய – ஏதாவது வேலையில் ஏன் ஈடுபாடு காட்டக் கூடாது? குடும்பத்தினரின் உதவியால் உங்கள் தேவைகள் கவனிக்கப்படும். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது. நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

 

ரிஷபம் ராசிபலன்:

உடல் திறனை பராமரிக்க விளையாட்டில் சிறிது நேரம் செலவிட வாய்ப்புள்ளது. கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நீங்கள் விரும்பும் எல்லா கவனத்தையும் பெறும்போது – அற்புதமான நாளாக அமையும். பல விஷயங்கள் வரிசையாகக் கிடைக்கும். எதைப் பின்பற்றுவது என்பதில் உங்களுக்குப் பிரச்சினைகள் வரும். இன்று, உங்கள் அன்புக்குரியவர் உங்களை நேசிக்கிறார் என்பதை உணர்வீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். சுவையான உணவு, ரொமான்டிக்கான தருணங்கள் இதனை இன்று நீங்கள் அனுபவிப்பீர்கள்.

 

மிதுனம் ராசிபலன்:

சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். குடும்ப நிகழ்ச்சியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். நல்ல நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய புதையலைப் போன்றவர்கள். இன்று நீங்களும் உங்கள் காதல் துணையும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து காதலின் உச்சத்தை அடைவீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். இன்று, உங்கள் துணை காதலும் களிப்பும் நிறைந்த வேறு ஒரு இனிய உலகுக்கு உங்களை அழைத்து செல்வார்.

 

கடகம் ராசிபலன்:

உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் – அது உங்களுக்கு நல்லதை செய்யும். இன்று ரொமான்ஸ் வாழ்வில் சிக்கல் நிறைந்திருக்கும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனல் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.

 

சிம்மம் ராசிபலன்:

டென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள் – அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால், அவர்கள் சங்கடப்படுவார்கள். நீங்கள் அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இடையில் அது தடையைத்தான் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். உங்கள் துணைக்கு உங்கள் அக்கரை தேவை இதனால் வீட்டில் சில ப்ரச்சனைகளை சந்திக்கலாம்.

 

கன்னி ராசிபலன்:

வெளிப்படையான பயமற்ற கருத்துகள் உங்கள் நண்பரின் தற்பெருமையை காயப்படுத்தும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். ஆனால் நீங்கள் நேசிப்பவர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க நாக்கை கட்டிப் போடுங்கள். காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். தொடர்கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.

 

துலாம் ராசிபலன்:

நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

சிறிது மன அழுத்தம் இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். மனைவியுடன் உறவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிக நல்ல நாள். ஒரு குடும்பத்தில் உறவில் இருவருமே முழுமையாக அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு இருவருமே தயாராக இருக்க வேண்டும். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். பயணம் செல்வதாக இருந்தால் எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதி செய்யவும். உங்களுக்கு மூட் இல்லாவிட்டாலும் உங்கள் துணை வெளியே செல்ல கட்டாயப்படுத்த கூடும் இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

 

தனுசு ராசிபலன்:

அதிகம் சாப்பிடுவது, அதிக கலோரி உணவை தவிர்க்க வேண்டும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும்.

 

மகரம் ராசிபலன்:

நலிவுற்ற உடல் மனவை பலவீனமாக்கும் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் – குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. உங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு வாக்குறுதி தருவீர்கள். இன்று உங்கள் வேலையில் பலம் என்னவென்றும் உங்கள் பலவீனம் என்னவென்றும் அறிந்து கொள்வீர்கள். இன்று கடினமான நாள்.

 

கும்பம் ராசிபலன்:

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர் ரொம்ப பிகு பண்ணுவதால் இன்று உங்களுக்கு ரொமான்ஸ் சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் பிரச்சினையை சமாளிக்க நண்பரின் உதவியை நாடுங்கள். மறந்துவிட்டு பழையதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் உங்கள் மன மற்றும் உடல் சக்திதான் வீணாகும். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களுக்கு ஊக்கம் அளிப்பார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Total Page Visits: 67 - Today Page Visits: 1