உங்கள் இன்றைய ராசி பலன்-19/02/2018

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும், விடுமுறை திட்டமிடலுக்கும் நல்லது. இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள். வேலையில் தொழில் செய்யும் போக்கு உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும். இன்று நீங்கள் ஷாப்பிங் சென்றால் உங்களுக்கு அருமையான ஒரு டிரஸ் தேர்வு செய்வீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வில் மிகவும் சாதகமான நாள்.

 

ரிஷபம் ராசிபலன்:

இன்னும் பரந்த மனதுடன் இருக்க உங்களுக்கு நீங்களே தூண்டுதலாக இருங்கள். அது நம்பிக்கையையும் வளைந்து கொடுக்கும் தன்மையையும் அதிகரிக்கும். ஆனால் அதேசமயத்தில் அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். இன்று உங்கள் ஸ்வீட் ஹார்ட் உங்களை மிகவும் மிஸ் செய்வார். ஒரு அருமையான சர்ப்ரைசை ப்ளான் செய்து அவர்களது நாளை இனிமையாக்குங்கள். இது வரை நீங்கள் செய்த கடின உழப்பு இன்று உங்களுக்கு நல்ல பலன்களை தரும். நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் திருமண வாழ்விலேயே இன்று மிக இணக்கமான நாள்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் வெறுப்பைக் கொல்வதற்கு நல்லிணக்கமான இயல்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அன்பைவிட அதிக சக்திவாய்ந்தது, உடலை மிக மோசமாக பாதிக்கக் கூடியது. நல்லதைவிட கெட்டதுதான் வேகமாக வெற்றி பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. குடும்பத்தினர் தரும் நல்ல அறிவுரை இன்று உங்களுக்கு லாபத்தை ஏற்படுத்தும். இந்த நாள் உங்களுக்கு ரோஜாக்களின் நறுமணத்தை வழங்கும். காதலின் அற்புதத்தை உணர்ந்து மகிழுங்கள். இன்று ஆபீசில் நடக்கும் ஒரு ப்ரச்சினையில் தேவையில்லாமல் நீங்கள் தான் அதற்கு காரணம் என்பது போல மாட்டிக்கொள்ள கூடும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள்.

 

கடகம் ராசிபலன்:

உடல்நலனில் சிறிது அக்கறை தேவைப்படும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும், அவர்கள் உங்கள் மீது அன்பை பொழிவார்கள். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. இன்று உங்கள் காதல் வாழ்வில் ஒரு இனிமையான திருப்பத்தை சந்திப்பீர்கள். காதல் வசப்பட்டு சொர்கத்தில் மிதக்கும் உணர்வை பெறும் நாளிது. சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும். திருமண வாழ்வில் அதிக எதிர்பார்ப்பு இருந்தால் இன்று ஏமாற்றம் ஏற்படலாம்.

 

சிம்மம் ராசிபலன்:

உங்களின் கடுமையான நடத்தையால் மனைவியுடன் உறவு பாதிக்கப்படலாம். அல்பமாக எதையாவது செய்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் விளைவுகளை யோசியுங்கள். முடியுமானால் வெளியில் சென்று மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். இன்று சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள் – ஆனால் யதார்த்தமாக இருங்கள். உதவி செய்பவர்களிடம் அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். வேலையில் டைனமிக்கான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களை செய்ய சகாக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க சகாக்களை ஊக்கப்படுத்துவது பாசிட்டிவான ரிசல்ட்களை தரும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். இன்று நீங்கள் ஒரு தவறினை இழைப்பதால் உங்கள் திருமண வாழ்க்கை காயப்பட கூடும்.

 

கன்னி ராசிபலன்:

உங்களை சாந்தமாக வைத்திருக்க உதவும் செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் – குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. நண்பர்கள் மூலமாக முக்கியமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள் – பின்னர் வருத்தப்பட நேரிடும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். பயணத்தில் புதிய இடங்களை பார்ப்பீர்கள், முக்கியமானவர்களை சந்திப்பீர்கள். இன்று உங்கள் திருமண வாழ்வுஇல் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.

 

துலாம் ராசிபலன்:

பலன் தரக் கூடிய நாள். நீடித்த நோய்கு நீங்கள் நிவாரணம் காணலாம். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் வரலாம். ஆனால் குடும்பத்தினரின் உதவியால் அவற்றை உங்களால் தீர்க்க முடியும். இதெல்லாம் வாழ்வில் சகஜம். இதில் இருந்து யாரும் தப்ப முடியாது. எல்லோருக்கும் எல்லா நேரமும் சூரிய வெளிச்சமாகவோ அல்லது மேகம் மூடிய இருளாகவோ இருந்துவிடாது. திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். சிஸ்டம் ஒழுங்காக செயல்படாத நிலை இன்று ஏற்படலாம். அது உங்களது கற்பனையாக கூட இருக்க்கலாம் எனவே மின் சப்ளை மற்ற அத்யாவசிய விஷயங்களை சரி பார்த்த பின் நிபுணரை அழைக்கவும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். இன்று உங்கள் துணையுடன் ஆத்மார்த்தமாக அளவளாவி மகிழ்வீர்கள்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள் – ஆனால் அப்படி செய்தால் வருத்தப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியை காண நீங்கள் ரிலாக்ஸ் பண்ண முயற்சிக்க வேண்டும். உங்களின் வெளிப்படையில்லாத வாழ்க்கை துணைவரை டென்சனாக்கும். மகிழ்ச்சியுடன் பிசினஸை கலக்காதீர்கள். இன்று மனதை சோதித்துப் பார்ப்பீர்கள் – சிலர் செஸ், குறுக்கெழுத்து விளையாடுவீர்கள்.- மற்றவர்கள் கதை- கவிதை எழுதுவீர்கள் அல்லது எதிர்கால திட்டங்களை தயாரிப்பீர்கள். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். கற்பனைகளில் வேகம் காட்டாதீர்கள். யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள் – நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள் – அது உங்களுக்கு நல்லதை செய்யும். உங்களுடன் இருப்பதே உலகில் அர்த்தமுள்ளதாக காதலருக்குத் தோன்றும். இன்று உங்கள் வேலையில் சிறப்பாக நீங்கள் ஏதேனும் செய்ய கூடும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். வீனஸ் போன்றவர்கள் பெண்கள் மார்ஸ் போன்றவர்கள் ஆண்கள். ஆனால் இன்று வீனசும் மார்சும் ஒருவருள் ஒருவர் கரைந்து உருகும் நாள்.

 

மகரம் ராசிபலன்:

தங்கள் கனவுகளை நனவாக்க வீட்டையும் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கும் நபர்களைப் போல நீங்கள் நடந்து கொண்டு அவர்களின் வழியை பின்பற்றாதீர்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் உங்கள் துணைவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் சிறிய பிரச்சினை எழுந்து வீட்டில் அமைதியைக் கெடுக்கலாம். காதலில் உண்மைத்தன்மையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். துணிச்சலான ஸ்டெப்களும் முடிவுகளும் சாதகமான ரிவார்டுகளைக் கொண்டு வரும். பயணம் உடனடி ரிசல்ட்டைத் தராது. ஆனால் எதிர்கால பயனுக்கு நல்ல அடித்தளமிடும். உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தலையை பிய்த்து கொள்வீர்கள். எனவே மன அமதிக்கு தியானம் செய்யுங்கள்.

 

கும்பம் ராசிபலன்:

மற்றவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை பகிர்ந்து கொள்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆனால் அதைப் புறக்கணித்தால் பின்னர் தொந்தரவு ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். மாலையில் மூவி-தியேட்டர் அல்லது டின்னரின்போது உங்களை ரிலாக்ஸாக மற்றும் அற்புதமான மனநிலையில் வைத்திருக்க வாழ்க்கைத் துணைவர் விரும்புவார். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் – நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். விண்ணப்பம் அனுப்ப அல்லது நேர்காணலுக்குச் செல்ல நல்ல நாள் உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும்.

 

மீனம் ராசிபலன்:

உங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுவீர்கள் – வழக்கத்துக்கு மாறான நடத்தையால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் குழப்பமாகி வெறுப்படைவார்கள். ஊகங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்பது எல்லோரையும் ரிலாக்ஸ் செய்ய வைத்து இனிய மன நிலையில் வைக்கும். பனிக்கட்டியை போல வருந்தாதீர்கள், இன்று கவலைகள் உருகிவிடும். வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் எழும்- குறிப்பாக நீங்கள் டிப்ளமேட்டிக்காக விஷயங்களைக் கையாளாவிட்டால். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். திருமண வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments