உங்கள் இன்றைய ராசி பலன்-28/02/2018

Advertisement

Subscribe to our YouTube Channel

மேஷம் ராசிபலன்:

குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலை வருத்திக் கொள்ளாதீர்கள். உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருப்பிடத்துக்கான முதலீடு லாபகரமாக இருக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள். இன்று உங்கள் அன்புக்குரியவர் இல்லாமல் மிகவும் வருந்துவீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். பயணம் பலன் தரும், ஆனால் செலவுமிக்கதாக இருக்கும். இந்த நாள் உங்கள் துணையா அல்லது வேறு ஒன்றா/வேறு ஒருவரா என உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

 

ரிஷபம் ராசிபலன்:

மன ரீதியான பயம் பொறுமையை இழக்கச் செய்யும். நல்லவற்றின் பக்கமான பார்வையும் சிந்தனையும் அவற்றைத் தள்ளி வைக்கும். நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும். காதல் விவகாரங்களில் நாவைக் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால் அது ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தலாம். உங்களை வெளிப்படுத்திக் கொண்டு – கிரியேட்டிவ் இயல்புள்ள வேலையில் ஈடுபடுவதற்கு நல்ல நேரம். இன்று கூடி பழகும் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் அதிகம் விரும்பும் செயலை பாலோ பண்ணவும் நேரம் இருக்கும். உங்கள் துணை திருமண வாழ்வின் அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ள கூடும்.

 

மிதுனம் ராசிபலன்:

உங்கள் டென்சனைக் குறைக்க குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுங்கள். உதவிகளை நன்றியுடன் பெற்றுக் கொள்ளுங்கள். உணர்வுகளையும் மன அழுத்தத்தையும் உள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அடிக்கடி பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு உதவும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். காதல் விவகாரம் பற்றி டமாரம் அடிக்க வேண்டாம். தொழிலில் நிபுணத்துவத்துக்கு சோதனை ஏற்படும். விரும்பிய ரிசல்ட்டைப் பெறுவதற்கு, முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும். பவர் கட் அல்லது வேறு காரணத்தால் காலையில் சிரம்ம் ஏற்படலாம்.ஆனல் உங்கள் துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

 

கடகம் ராசிபலன்:

குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். ஆபீசில் ஒருவர் உங்களிடம் தவறாக நடக்கலாம் எச்சரிக்கை தேவை. கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.

 

சிம்மம் ராசிபலன்:

உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது முக்கியமானதாக இருக்கும் நாள். உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார் – அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடன் கலந்து பேசுவது உங்களுக்கு நல்ல ஐடியாக்களையும் பிளான்களையும் தரும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். உங்கள் திருமண வாழ்வில் ஒரு வித சலிப்பு ஏற்படும். நீங்கள் அதை சரி செய்ய இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.

 

கன்னி ராசிபலன்:

உங்கள் மனநிலையை மாற்றுவதற்கு நண்பர்களுடன் கூடுங்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்களுக்கும் துணைவருக்கும் இடையிலான காதல் குறைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. வேறுபாடுகளைக் களைய பேசுங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.

 

துலாம் ராசிபலன்:

நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனைவியுடன் பிக்னிக் செல்ல மிக நல்ல நாள். அது உங்கள் மனநிலையை மாற்றுவது மட்டுமின்றி, தவறான புரிதலை சரி செய்யவும் உதவும். இன்று காதல் மன நிலையில் இருப்பீர்கள் – நிறைய வாய்ப்புகள் வரும். வேலையில் அவசரம் காட்டினால் கோபம் அதிகரிக்கும் – எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பு, மற்றவர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். உங்கள் துணை இது போல அற்புதமாக இது வரை இருந்ததில்லை. உங்கள் அன்புக்குரியவரிடம் இருந்து நீங்கள் இன்று ஒரு இனிய சர்ப்ரைசை எதிர்பார்க்கலாம்.

 

 

விருச்சிகம் ராசிபலன்:

அவசரமாக எடுக்கும் முடிவு சில பிரச்சினையை உருவாக்கலாம். எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் அமைதியாக / சாந்தமாக சிந்திக்கவும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இன்று ஆபீசில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். நெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.

 

தனுசு ராசிபலன்:

அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். நண்பர்கள் – பிசினஸ் நிறுவனங்கள் மற்றும் உறவினர்களுடன் – டீலிங் செய்யும்போது உங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் – அவர்கள் உங்கள் நலனைப் பற்றி கவலைப்படாதிருக்கலாம். உங்கள் காதலரின் உணர்ச்சிகரமான தேவைக்கு அடிபணியாதீர்கள். கிரியேட்டிவ் துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புகழும் அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் வெற்றிகரமான நாள். ரகசிய விரோதிகள் உங்களைப் பற்றி புரளிகளைப் பரப்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணை கூறிய பொய்யால் நீங்கள் வருத்தமடைவீர்கள்.

 

மகரம் ராசிபலன்:

நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தை செலவிடாவிட்டால் – வீட்டில் பிரச்சினைகள் எழலாம் காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இன்று மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகள் கடைசியில் ஆதாயம் தருபவையாக இருக்கும். ஆனால் பார்ட்னர்களின் எதிர்ப்பை சந்திப்பீர்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். னீங்கள் இன்று த்ட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே பயக்கும்.

 

கும்பம் ராசிபலன்:

கழுத்து / முதுகில் தொடர்ந்த வலியால் அவதிப்படலாம். அதைப் புறக்கணித்துவிட வேண்டாம். குறிப்பாக பொதுவாக உடல் பலவீனமாக இருக்கும் போது. இன்றைக்கு முக்கியமாக ஓய்வு தேவை. உங்கள் செலவு எதிர்பாராமல் அதிகரிப்பது மன அமைதியைக் கெடுக்கும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால், எல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். பொய் சொல்லாதீர்கள், அது உங்கள் காதல் விவகாரத்தை கெடுத்துவிடும். கஷ்டமான பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபட, உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை இன்று உடல் நலம் பாதிக்கப்படுவார். கவனம் தேவை.

 

மீனம் ராசிபலன்:

அபரிமிதமான சக்தியாக இருப்பீர்கள் – ஆனால் வேலையில் ஏற்படும் அழுத்தம் எரிச்சல் அடையச் செய்யும். வீட்டுக்கான ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். ரொமான்ஸ் வாய்ப்பு உள்ளது. ஆனால் உணர்ச்சிகரமான பிரச்சினைகளால் உறவில் பாதிப்பு வரலாம். இன்று வேலையில், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.

இந்த வார ராசி பலன் வீடியோ இணைப்பு –

மேஷ ராசி இந்த வார ராசிபலன் Mesham Vara Rasi Palan – VIDEO

ரிஷபம் ராசி இந்த வார ராசிபலன் Rishabam Vara Rasi Palan – VIDEO

மிதுனம் ராசி இந்த வார ராசிபலன் Midhunam Vara Rasi Palan – VIDEO

கடகம் இந்த வார ராசிபலன் Kadagam Vara Rasi Palan – VIDEO

சிம்மம் இந்த வார ராசி பலன்கள் Simam Vara Rasi Palan – VIDEO

கன்னி இந்த வார ராசிபலன் Kanni Vara Rasi Palan – VIDEO

துலாம் ராசி பலன் | Thulam Vara Rasi Palan – VIDEO

விருச்சிகம் ராசிபலன் Viruchigam Indha Vara Rasi Palan – VIDEO

தனுசு இந்த வார ராசிபலன் Dhanusu Vara Rasi Palan – VIDEO

மகரம் இந்த வார ராசிபலன் Makaram Vara Rasi Palan – VIDEO

கும்பம் வார ராசிபலன் Kumbam Vara Rasi Palan – VIDEO

மீனம் இந்த வார ராசிபலன் Meenam Vaara Rasi Palan – VIDEO

இந்த வார ராசி பலன்கள் Vara rasi palan ( January 06 – January 12 ) | Weekly prediction | Minaliya TV

Facebook Comments
Total Page Visits: 3 - Today Page Visits: 1