மகனின் விந்தணு மூலம் இரு குழந்தைகளுக்கு தாயான பெண்

புற்றுநோயால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த மகனின் உயிரணுவைப் பயன்படுத்தி, பாட்டியாகி உள்ளார், மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த பெண்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின் புனேயைச் சேர்ந்தவர், ராஜஸ்ரீ படேல், 48.

இவரது மகன் பிரதமேஷ் படேல், 2010ல், படிப்பதற்காக ஐரோப்பிய நாடான ஜெர்மனி சென்றார். அப்போது, மருத்துவப் பரிசோதனையில், மூளையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதற்காக அங்கு சிகிச்சை பெற்றார்.

அப்போது, டாக்டர்களின் அறிவுரைப்படி, தன் உயிரணுவை, அவர் சேமித்து வைத்தார். அதை தன் தாய் மற்றும் தங்கை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என, அவர் கூறியிருந்தார்.

நோய் முற்றியதால், 2013ல், அவர் நாடு திரும்பினார். 2016ல் அவர் உயிரிழந்தார். புற்றுநோய்க்கு, 27 வயது மகனை இழந்த ராஜஸ்ரீக்கு, மகனுடைய உயிரணு சேமிக்கப்பட்டது நினைவுக்கு வந்தது. பல போராட்டங்களுக்குப் பின், ஜெர்மனியில் இருந்து மகனுடைய உயிரணுக்களை வரவழைத்தார். பின், புனேயில் உள்ள ஒரு மருத்துவமனையில், மற்றொரு பெண்ணின் கருமுட்டை தானமாகப் பெறப்பட்டது.

செயற்கை முறையில் கருவூட்டல் நடத்தப்பட்டு, வாடகைத் தாய் மூலம், சமீபத்தில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகளுக்கு பாட்டியாகியுள்ளார் ராஜஸ்ரீ.

”அறிவியல் வளர்ச்சி, உயிரிழந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், மகன் மூலம் எனக்கு இரண்டு பேரக் குழந்தைகளை அளித்துள்ளது,” என, ராஜஸ்ரீ மகிழ்ச்சியுடன் கூறினார்.

Total Page Visits: 172 - Today Page Visits: 4