பட வாய்ப்புக்காக அதை செய்தேன் – நடிகை ராதிகா ஆப்தே பகிரங்க பேட்டி !

Subscribe to our YouTube Channel

மும்பை: தேவ் டி இந்தி பட ஆடிஷனுக்காக போனில் செக்ஸியாக பேசியதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

திரையுலகில் உள்ள நடிகைகள் தற்பொழுது பட வாய்ப்புக்காக எதையும் செய்ய தயாராகிவிட்டார்கள்,

நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது.நடிகை ராதிகா ஆப்தேவும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை.

அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமாகி உள்ளார்.

மேலும் பிரபல நடிகை ராதிகா ஆப்தே தமிழ்,ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து வருபவர், இவர் சூப்பர் ஸ்டாருடன் கபாலி படத்தில் நடித்தவர்.

தற்பொழுது பல சர்ச்சை விஷயங்களை தனியாக தைரியமாக பேசி சர்ச்சையை சந்தித்துவருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு திரையுலகம் மீது புகார் தெரிவித்தார்.

பின்னர் பிரபலமான தெலுங்கு நடிகரை அறைந்ததாக கூறினார். இந்நிலையில் இப்பொழுது அவர் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்,

அதில் அவர் கூறியதாவது புனேவில் தேவ் டி படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன்.

அப்பொழுது அவர்கள் போனில் செக்ஸியாக பேசுவதை போல் நடித்து காட்ட சொன்னார்கள்.ஆனால் நான் இதுவரை அப்படி பேசியதில்லை,

இருந்தாலும் அனைவரின் முன்பும் செக்ஸியாக பேசுவதை போல் நடித்து காட்டினேன் என கூறினார், இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

Facebook Comments