இந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதலில் ஒத்தே போகாதாம்!.

Subscribe to our YouTube Channel

காதல் என்பது எப்போது எந்த நேரத்தில் வரும் என்பதே யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான். ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் பொழுது,

ஒரு குறிப்பிட்ட இரண்டு ராசிக்காரர்கள், காதலித்தால் அந்த காதலில் பல பிரச்சினைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அப்படியே காதல் மலர்ந்தாலும் கூட அதில் பல பிரச்சினைகள் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது.

துலாம் மற்றும் மீனம்

துலாம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இடையே காதல் மலர்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த இரண்டு ராசிக்காரர்களும் காந்தங்களை போன்றவர்கள் என்றே கூறலாம்.. இவர்கள் இருவரும் நேர் எதிரான சிந்தனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் காதல் வாழ்க்கை என்பது நீண்ட கால பயணம் ஆகும். இரண்டு வெவ்வேறு அளவுகளில் உள்ள சக்கரங்களை கொண்டு

வாழ்க்கை பாதையில் கண்டிப்பாக சிறப்பாக பயணிக்கவே முடியாது என்பது தான் உண்மையான ஒன்றாகும். துலாம் ராசிக்காரர்கள்,

எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா வராதா என்று யோசித்து முடிவு செய்ய கூடியவர்கள்.

பிராக்டிக்கலாக இருப்பவர்கள், இவர்களுக்கு ஒவ்வொரு விஷயமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மீன ராசிக்காரர்களின் குணம் மீன ராசிக்காரர்கள் மெல்லிய மணம் கொண்டவர்கள், வாழ்க்கையின் பாதைக்கு ஏற்றவாறு செல்ல கூடியவர்கள்.

சிறு சொல்லை கூட தாங்கிக் கொள்ள முடியத இளகிய மனம் கொண்வர்களாக இருக்கிறார்கள்.

மேஷம் மற்றும் விருச்சிகம்

மேஷம் மற்றும் விருச்சிகம் கண்டிப்பாக காதலில் சிறப்பாக செயல்பட முடியாது என்று ஜோதிடம் கூறுகிறது.

இவர்களது காதல் மற்றும் திருமண வாழ்க்கையானது அந்த அளவுக்கு சிறப்பானதாக இருக்க வாய்ப்பு இல்லை.

ஆதிக்கம் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே மற்றவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், இரண்டு ராசிக்காரர்களும் தனிப்பட்ட முறையில் காணும் போது மிக சிறந்த சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கடகம் மற்றும் மிதுனம்

கடகம் மற்றும் மிதுன ராசிக்காரர்கள் இருவருமே கிட்டதட்ட ஒரே மாதிரியான குணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் இவரும் ஒரே நேரத்தில் சோகமாகிவிடுவது, கோபமடைந்து விடுவார்கள்.

அதே போல இருவரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் மாறிவிடுவார்கள்…

பிரிவு காதல் அல்லது இல்லற வாழ்க்கையில் எப்போதுமே ஒருவர் கோபமாக இருக்கும் போது

மற்றொருவர் அமைதியாக அவரை சமாதானம் செய்து வைக்கும் நோக்கில் இருந்தால் தான் பிரச்சனை பெரியதாகாமல் இருக்கும்.

அல்லது ஒருவர் சோகமாக இருக்கும் போது மற்றொருவர் ஆறுதல் சொல்லும் விதமாக இருப்பது அவசியமாகும். ஆனால் இவர்களுக்கு இடையில் இது இல்லை..

சிம்மம் மற்றும் ரிஷபம்

சிம்மம் மற்றும் ரிஷபம் பொதுவாக இரண்டு ராசிகளுக்கு இடையில் காதலில் ஏதேனும் ஒரு சில பகுதிகளாகவது சிறப்பாக அமையும் என்று கூறலாம்.

ஆனால் இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாத இராசிகளாக உள்ளன.

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமே மற்றவர்களை தங்களுக்கு கீழ் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

 

கும்பம் மற்றும் விருச்சிகம்

கும்பம் மற்றும் விருச்சிகம் கும்பம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இருவருமே பிடிவாத குணம் மற்றும் தன்னிச்சையாக வாழ வேண்டும்,

சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மேலும், கும்ப ராசிக்கார்கள் எப்போதுமே விருச்சிக ராசிக்காரர்களின் குறைகளை தான் பார்க்கிறார்கள் என்று ஜோதிடம் கூறுகின்றது.

 

Facebook Comments