இனி சுசி லீக்ஸ் இல்லை ! இப்போ ஸ்ரீ லீக்ஸ் தான் ஹிட் – கலக்கத்தில் ஹீரோக்கள் !

[sm-youtube-subscribe]

சுசி லீக்ஸ் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ஆபாசப் படங்கள் வெளியானதோடு,

எந்த எந்த நடிகர் எந்த எந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தார்,

எந்த இயக்குநரும் எந்த நடிகைக்கும் கனேக்‌ஷன் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிறகு ஒரு வழியாக இந்த விவகாரம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பெயரில் லீக்ஸ் வெளியாகி நடிகர்களை பீதியடைய செய்துள்ளது.

தெலுங்கு சினிமா நடிகையான ஸ்ரீ ரெட்டிக்கும் திரையுலக பிரபலங்கள் சிலருக்கும் வேறு மாதிரியான தொடர்பு உள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

இதில் பிரபல நடிகர்களும் அடக்கம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பட வாய்ப்பு தருவதாக தனக்கு ஆசை காட்டி, தன்னை மோசம் செய்த திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு

அவர்களின் உண்மை முகத்தை அனைவருக்கும் காட்டப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடங்கியுள்ள ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் பக்கத்தில்,

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் முன்பை விட தற்போது மிகவும் அதிகமாக உள்ளது.

அப்படி படுக்கை அழைப்பவர்களை எக்ஸ்போஸ் செய்யாமல் விட மாட்டேன், என்று தெரிவித்திருப்பவர்

முதல் கட்டமாக நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

லீக்ஸ் ஆரம்பம் என்ற பதிவோடு அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் ஸ்ரீ ரெட்டி,

தெலுங்கு சேனல் ஒன்றுக்கு தான் அளிக்கும் பேட்டியில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்களின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ரெட்டியின் இத்தகைய பதிவால் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Total Page Visits: 197 - Today Page Visits: 1