சர்ச்சை ட்விட் ! கைதாகிறார் நடிகை கஸ்தூரி ?

சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் விதத்தில் பேசி வருகிறார் நடிகை கஸ்தூரி.கடந்த மாதம் 22-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தும் சிறுவனை அடித்து கொன்ற சம்பவம் தமிழக மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

இந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த கஸ்தூரி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இதனால் ட்விட்டரில் ஒரு கலவரமே நடந்தது.

இதுபோல இரு சமூகத்தினரிடையே சண்டையை தூண்டும் விதத்தில் பேசிய கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு ஒரு அமைப்பு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் கஸ்தூரி கைதாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Facebook Comments