ஆஸ்கரில் வென்ற படத்தை பின்னுக்கு தள்ளி அசத்திய மெர்சல்

[sm-youtube-subscribe]

மெர்சல் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது;

சினிமா ரசிகர்களிடையேயும் மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதையெல்லாம் மிஞ்சியதாக இருக்கிறது, அப்படம் தற்போது பெற்றிருக்கும் விருது.

இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி 1999ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. திரையுலகத்தின் வளர்ச்சிக்காக அந்த அமைப்பு செயல்படுகிறது.

திரைப்பட விழாக்கள், கண்காட்சிகள், மாநாடுகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை இந்த அமைப்பு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடத்தி வருகிறது.

இந்த அமைப்பின் திரைப்பட விருதுகளுக்கான இணையதள வாக்களிப்பு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதில் அதிக அளவாக இதுவரை இல்லாத அளவுக்கு 24 லட்சம் பேர் 18 பிரிவுகளில் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களித்தார்கள்.

சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது என இரு பிரிவுகளில் ‘மெர்சல்’ படம் அந்தப் போட்டியில் இடம் பெற்றது.

சிறந்த அயல்நாட்டுப் படங்களில் Happy End (France), Loveless (Russia), In The Fade (Germany/France), The Square (Sweden, Germany, France),

A Fantastic Woman (Chile), Vaya (South Africa), The Insult (Lebanon), Mersal (India) ஆகிய படங்கள் இருந்தன. இவற்றில்‘மெர்சல்’ படம் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.


மெர்சல் திரைப்படத்தைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து கலந்துகொண்ட படங்கள் அனைத்துமே, பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டவை.

சிலி நாட்டிலிருந்து கலந்துகொண்ட A Fantastic Woman திரைப்படம் உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதில் கலந்துகொண்டு,

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற விருதை வென்றது.

அப்படிப்பட்ட திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளி மெர்சல் திரைப்படம் முதலிடத்தைப் பெற்று அவ்விருதை வென்றிருக்கிறது.

இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமியைப் பொறுத்தவரையில்,

அவர்கள் இணையதள வாக்கு செலுத்தும் முறையைப் பின்பற்றுவதால் உலகின் பல நாடுகளிலும் வசிக்கும் விஜய் ரசிகர்கள்

மற்றும் மெர்சல் படத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு வாக்கு செலுத்தியிருக்கிறார்கள்.

மெர்சல் படத்துக்கு வாக்கு செலுத்தியது போலவே, துணை நடிகர் கதாபாத்திரத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த

நடிகர் விஜய்க்கும் வாக்கு செலுத்தியிருந்தால் அவரும் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றிருப்பார்.

Total Page Visits: 244 - Today Page Visits: 1