காணாமற் போன இளைஞன் திருநங்கையாக மீட்பு ! அதிர்ச்சி அடைந்த தாய் !

Subscribe to our YouTube Channel

தமிழகத்தில் காணமல் போன இளைஞன் திருநங்கையாக மீட்கப்பட்டதால், அவரைக் கண்டவுடன் தாய் கதறி அழுததைக் கண்டு நீதிபதி

அவருக்கு அறிவுரை கூறி வழக்கை முடித்து வைத்துள்ளார். சென்னை கொரட்டுரைச் சேர்ந்தவர் கலைவாணி.

கூலித் தொழிலாளியான இவருக்கு ராகுல் என்ற மூத்த மகன் உள்ளார். ராகுல் திடீரென்று காணமல் போனதால்,

இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் பொலிசார் சரியாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினார்ல் கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது மூத்த மகன் கடந்த ஜனவரி மாதம் காணமல் போய்விட்டதாகவும்,

இத் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்,

காணமல் போன எனது மகனை கண்டு பிடித்து நேரில் ஆஜர் படுத்தும் படி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன ராகுலைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன் படி பொலிசார் ராகுலை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் விழுப்புரத்தில் தங்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கே சென்ற போது ராகுலுக்கு பதிலாக ஒரு திருநங்கை இருந்துள்ளார். இதனால் பொலிசார் அவரிடம் ராகுல் எங்கே என்று கேட்டுள்ளனர்.

உடனே அந்த திருநங்கை என் பெயர் சுமித்ரா, நான் தான் ராகுல் என்று தெரிவித்துள்ளார். பொலிசார் உண்மையை கூறு என்று கேட்ட போது,

நான் தான் ராகுல் என் உடலில் மாற்றம் ஏற்பட்டதால் குடும்பத்தாருடன் இருக்க வேண்டாம் என்று இங்கு வந்துவிட்டேன்,

இங்கு திருநங்கையாக வாழ்கிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். பொலிசாரோ நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

உன்னை ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி அவரை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

மகன் ராகுல் வருவார் என்று காத்திருந்த தாயார் கல்யாணிக்கு, பொலிசார் சேலை கட்டிய ஒருவரை அழைத்து வந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.

அவர் என்னுடைய மகன் எங்கே என்று கேட்ட போது, இவர் தான் உங்கள் மகன் திருநங்கையாக மாறிவிட்டான் என்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.

மகன் திருநங்கையாக மாறி வந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் தாயார் கல்யாணி கதறி அழுதார்.

ஏன்டா இப்படி குடும்பத்துக்கு அவமானத்தை தேடித் தருகிறாய், ராகுலாக வா என்று அழுதார்.

ராகுல் அம்மா அது என்னால் முடியாது, நான் இப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று அழுதார்.

தாயின் பரிதாப நிலையைப் பார்த்து வருத்தப்பட்ட நீதிபதிகள் திருநங்கை சுமித்ராவின் நிலையை தாயார் கலைவாணிக்கு எடுத்துரைத்தனர்.

அதைத் தொடர்ந்து திருநங்கையாக மாறிய ராகுலிடம் பிச்சை எடுக்ககூடாது, நன்றாக படிக்கவேண்டும் தவறான வழியில் செல்லக்கூடாது,

தாய்க்கு உதவவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கி நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

Facebook Comments