தாயின் இறுதி ஊர்வலத்தின் போது தகப்பனுடன் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிய மகள்

Advertisement

பத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது.

அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயர்களை வெளிப்படுத்தியிருக்கிறது இந்தத் துயர் நிகழ்வு.

2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்திருக்கிறது.

இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த 15ஆம் நாள் நோயுற்ற நிலையில் மரணமானார்.

கிளிநொச்சி மருதநகரில் நேற்று நடந்த மனைவியின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 3 மணிநேரம் அனுமதிக்கப்பட்டார் ஆனந்தசுதாகர்.

பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட அவர் மனைவியின் உடலுக்கு இறுதிவணக்கம் செலுத்தியதுடன், தனது பிள்ளைகள் இருவருடனும், துயரைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதி நிகழ்வுக்குப் பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை பேருந்தில் ஏற்றும் போது, ஆனந்தசுதாகரின் மகளும் அந்த வாகனத்தில் ஏறிய காட்சி அங்கிருந்தவர்களை மாத்திரமன்றி, அதுபற்றிய படங்களை ஊடகங்களில் பார்த்த உலகெங்கும் உள்ள தமிழர்களையும் கலங்க வைத்துள்ளது.


தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் அந்தரித்து நிற்கின்றன.

இவர்களுக்கு ஆறுதல்தான் யார்?

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 2