ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் !!அதிகாரிகள் அதிர்ச்சி !

Advertisement

Subscribe to our YouTube Channel

ரஷ்யாவில் புறப்பட்ட விமானத்தில் இருந்து தங்கம் மற்றும் வைர குவியல்கள் விமான ஓடுதளத்தில் மழையாக பொழிந்த சம்பவம் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இருந்து நிம்பஸ் விமான சேவை நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்டவை குவியல் குவியலாக விமானத்தில் இருந்து மழை போன்று பொழிந்துள்ளது.

இது ஓடுதளம் முழுக்க சிதறியபடி விழுந்துள்ளது. குறித்த தகவல் விமானிக்கு தெரியப்படுத்தப்பட்டதும் விமானத்தை அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

குறித்த சரக்கு விமானமானது சுமார் 265 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் கட்டிகளை எடுத்துச் சென்றுள்ளது.

இந்த நிலையில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளதை அடுத்து குறித்த விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

இது கொள்ளையர்களின் சதியா அல்லது விமானம் பழுதானது தெரியாமல் விலைமதிப்பற்ற சரக்குகளை ஏற்ற அனுமதித்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விமானத்தை சேவைக்கு அனுமதித்த தொழில்நுட்ப அதிகாரிகளை முதற்கட்டமாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது.

இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும் சிகோட்டா மின்னிங் மற்றும் ஜியோலாஜிகல் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

இது ரஷ்யாவிலேயே அதிக வைர உற்பத்திக்கு பெயர்போன இடமாகும்.

 

Facebook Comments
Advertisement