சசிகலா புஷ்பா திருமணத்தில் புதிய திருப்பம் ! நடந்தது என்ன ?

Advertisement

Subscribe to our YouTube Channel

சசிகலா புஷ்பா திருமணம் செய்ய இருந்த  ராமசாமி என்னும் பிரமுகர் ஏற்கனவே திருமணமானவர் என்று

அவர் மனைவி சத்யபிரியா மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தையாேடு வந்து புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து தள்ளியே இருந்த சசிகலா புஷ்பா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் என்னும் அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டையே அதிரவைத்தார்.

இந்நிலையில் இந்த திருமணம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்ற செய்திகள் வந்ததை
கண்ட சத்யப்பிரியா என்னும் பெண்  கைக்குழந்தையாேடு வந்து,

தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும்  ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்றதாக மதுரை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஒரு வருடம் மட்டுமே இணைந்து வாழ்ந்ததாக கூறிய சத்யப்ரியா திருமணம் நடப்பது உண்மை தானா என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அந்தக் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது,

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா.

இந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர், நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டு செய்திகள் வந்து காெண்டிருக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு

மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாேடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்றதாேடு

தன்னை நீதீபதி என்று சாெல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான பாேட்டாே ஆதாரங்களை காண்பித்ததாேடு அவர் கூட சேர்ந்து வாழவேண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .

செய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்பாேவதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என காேரிக்கை வைத்துள்ளார் .

மேலும் ஒரு வருடம் தான் ராமசாமியாேடு சேர்ந்து வாழ்ந்ததாகவும் ,

அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர்   பாேன் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .

இந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமணதகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார் .

Facebook Comments
Total Page Visits: 4 - Today Page Visits: 3