இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார் !

பிரபல இயற்பியல் பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் குவாண்டம்

அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகள் செய்தவர்.
இந்த நூற்றாண்டின் புத்திசாலி மனிதர்களில் ஒருவர் என்று போற்றப்படுகிறார்.

மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலியில் உலவியபடியே சாதனைகளை படைத்தவர். இவருக்கு 21 வயது இருக்கும் போது மோட்டார் நியூரான் நரம்பியல் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் இவரது கழுத்திற்கு கீழே உள்ள பகுதி முழுக்க வேலை செய்யாமல் போனது.அவரது ஆயுள் காலம் சில காலமே என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆனால் அதை ஹாக்கிங் தொடர்ந்து உற்சாகமாகவே இயங்கினார்.நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகள் படைக்க ஆரம்பித்தார்.

இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்டவேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது.இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் உருவானது.

இவர் ஏலியன்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டு இருந்தார். கண்டிப்பாக இந்த பிரபஞ்சத்தில் எங்காவது ஒரு இடத்தில் வேற்றுகிரக உயிர்கள் வாழும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவர்கள் நம்மை சந்திப்பார்களா என்பது மட்டும் சந்தேகம் என்றும் தெரிவித்தார்.டைம் டிராவலுக்கு சரியான விளக்கம் கொடுத்தவர் இவர்தான்.

எதிர்காலத்தில் ஒளியை விட வேகமாக மக்கள் பயணம் செய்வார்கள் அப்போது டைம் டிராவல் சாத்தியம் என்று கூறினார்.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் என்று போற்றப்பட்ட ஹாக்கிங் மறைவு உலகம் முழுதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கிய அறிவுப் புரட்சியில் ஒன்று இவர் கூறிய பேரண்டம் விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கிக் கொண்டே வருகிறது என்ற கோட்பாடு.

இந்த உலகம் அழிவின் பாதையில் உள்ளது, மனிதர்களாகிய நாம் வெகு விரைவாக வாழ்வதற்கு ஏற்ற வேறு கிரகத்தை கண்டுபிடித்து அதில் குடியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எப்போதும் ஒரு வீல் சாரில் ஒரு பக்கம் தலை சாய்த்த படி தன் வாழ்க்கையைக் கழித்த இவர் பேச்சு திறனை இழந்ததால்,

தனது எண்ண ஓட்டத்தைக் கணினியின் மூலம் வார்த்தைகளாக்கி மற்றவர்களுடன் பேசி வந்தார். குவாண்டம் கோட்பாடு தந்த இவர், ‘டைம் மிஷின்’, வேற்றுக் கிரக வாசிகளுடனான தொடர்பு,

‘பிக் பாங் தியரி’ போன்றவற்றை பற்றியெல்லம் ஆராய்ச்சி செய்து வந்தார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்று நேரத்தைப் பற்றி இவர் எழுதிய புத்தகம்

உலகின் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர ‘தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல்’, ‘மை ஃப்ரீஃப் ஹிஸ்டரி’ போன்ற நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

மேலும் இவர் உலக பிரசதிப்பெற்ற ‘ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைகழகத்தில்’ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.அறிவியலில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்,

நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக இவரை அறிவியல் உலகம் பாராட்டுகிறது. இவருடைய மரணம் அறிவியல் துறைக்கு ஒரு ஈடில்லா இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Total Page Visits: 168 - Today Page Visits: 2