உங்கள் இன்றைய ராசி பலன்-12/03/2018

மேஷம் ராசிபலன்

ஒரு நண்பர் கண்டுகொள்ளாமல் இருப்பது உங்களை காயப்படுத்தும். ஆனால் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களை பாதிக்கக் கூடாது. மாறாக துன்பத்தைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள். பணம் சம்பந்தமாக யாருடன் டீல் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். உங்கள் சக்தியையும், ஆசையையும் புத்துணர்வூட்டும் வகையில் இன்ப சுற்றுலா செல்லக் கூடும். புதிய முயற்சிகள் தேடி வரும், நல்ல லாபத்திற்கு உத்தரவாதம் தரும். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

ரிஷபம் ராசிபலன்

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். உங்கள் வேலையை நன்றாக செய்திருக்கிறீர்கள் – இப்போது கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான நேரம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம்.

மிதுனம் ராசிபலன்

பெற்றோரின் ஆரோக்கியம் கவலை தரலாம் உங்கள் செலவுகள் அதிகரித்து மனதை அரிக்கலாம். தேவையில்லாத வாக்குவாதம் குடும்பத்தில் டென்சனை ஏற்படுத்தும். வாக்குவாதத்தின் மூலம் கிடைக்கும் வெற்றி நிஜமான வெற்றி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரையில் சிந்தனை திறமையால் இதைத் தவிர்க்கப் பாருங்கள். பிரச்சினைகளைத் தீர்க்க மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு, அமைதியாக யோசியுங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள் – பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.

கடகம் ராசிபலன்

உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள், குறிப்பாக மதுவை தவிர்த்திடுங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் – குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. பிள்ளைகள் உங்கள் நாளை கடினமானதாக ஆக்கலாம். அவர்களை ஆர்வமாக்கவும் தேவையற்ற அழுத்தத்தை தவிர்க்கவும் அன்பு எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். அன்புதான் அன்பை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று காதல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருக்கும். உங்களைச் சுற்றியுள்ள நிறைய பேரை பாதிக்கும் பிராஜெக்ட்களை அமல் செய்யக் கூடிய சக்திமிக்க நிலையில் நீங்கள் இருப்பீர்கள். ஒரு சூழ்நிலையைக் கண்டு நீங்கள் ஓடினால் – அது மிக மோசமாக உங்களைப் பின்தொடர்ந்து வரும். இன்று உங்களிடையே வாக்குவாதம் நடக்க கூடும்.

சிம்மம் ராசிபலன்

தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடலியல் பயன்களைத் தரும். முதலீடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சரியான ஆலோசனையை பெறுங்கள். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எல்லோரையும் நல்ல மன நிலைக்கு மாற்றும். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். ஷாப்பிங் செல்லும்போது அதிகம் செலவு செய்வதை தவிர்த்திடுங்கள். ஒருவரை பற்றி மற்றவர் உல்ளத்தில் உள்ள அனைத்து விஷயங்களை இன்று உரையாடி மகிழ்வீர்கள்.

கன்னி ராசிபலன்

சிக்கலான சூழ்நிலையில் அப்செட் ாக வேண்டாம். சாப்பாட்டின் சுவையை அறிய உப்பு தேவைப்படுவதைப் போல, மகிழ்ச்சியின் மதிப்பை அறிய மகிழ்ச்சியின்மையும் அவசியம். உங்கள் மனநிலையை மாற்ற சில நிகழ்ச்சிக்குச் செல்லுங்கள். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். உங்களி்ன் இரக்கமற்ற நடத்தையால் குடும்பத்தினர் அப்செட் ஆவார்கள். காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று மிக ரொமான்டிக்கான நாள். சுவையான உணவு, அற்புதமான நறுமணம், குதூகலம் நிரம்பிய இனிய பொழுது உங்கள் துணையுடன்.

துலாம் ராசிபலன்

தங்கள் கனவுகளை நனவாக்க வீட்டையும் ஆரோக்கியத்தையும் புறக்கணிக்கும் நபர்களைப் போல நீங்கள் நடந்து கொண்டு அவர்களின் வழியை பின்பற்றாதீர்கள். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள் – ஆனால் இன்றைக்கு சமூகப் பணியில் தர்மகாரியத்தில் கவனம் செலுத்துவீர்கள் – பிரச்சினையோடு உங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கனவுகள் நனவாகி இன்று காதல் பேரின்பம் அள்ளி வழங்கும். இன்று உங்களால் நீங்கள் வேலை செய்யும் கம்பனிக்கு பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது போல உணருவீர்கள்

விருச்சிகம் ராசிபலன்

சீக்கிரம் அலுவலகத்தை விட்டு வெளியே சென்று உண்மையில் நீங்கள் ஆனந்தப்படும் செயல்களைச் செய்யுங்கள். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் துணைக்கும் உங்களுக்கும் இடையே இன்று கருத்து வேறுபாட்டால் வாக்குவாதம் ஏற்படலாம்.

தனுசு ராசிபலன்

உங்களின் நீடித்த நோயை குணமாக்க புன்னகை சிகிச்சையைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் அருமருந்து. ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்கு நல்ல நாள் உங்களின் தேவைகளை நண்பர்களும் உறவினர்களும் புரிந்து கொள்ளவில்லை என்பதை அறிவீர்கள் – உங்களுக்காக மற்றவர்கள் மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, உங்கள மாற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ரொமாண்டிக் விவகாரம் இன்று மகிழ்ச்சியைத் தரும். உங்கள் இலக்கை அடைவதால் உங்களின் உறுதியான நிலைப்பாட்டுக்கு பலன் கிடைக்கும். கனவுகள் நனவாகும். இது தலைக்கனமாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நேர்மையுடன் வேலையைக் கவனியுங்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள். இன்று உங்கள் திருமணம் மோசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

மகரம் ராசிபலன்

உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது – அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருதலை மோகம் இன்றைக்கு பேரழிவாக அமையும். வேலையாட்களுடன் – சகாக்களுடன் மற்றும் சக தொழிலாளர்களுடன் பிரச்சினை ஏற்படுவதை தவிர்த்துவிட முடியாது. உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் உடல் நலம் குறித்து உங்கள் துணை உதாசீனமாக நடக்க கூடும்.

கும்பம் ராசிபலன்

வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கம் தோன்றும். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். குடும்பத்தில் ஆதிக்கம் காட்டும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் போக்கு மாறியிருப்பதால் அவர்கள் எல்லையில்லா ஆனந்தம் கொள்வார்கள். அன்பின் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். போட்டியிடும் இயல்பு எந்தவொரு போட்டியிலும் உங்களை வெற்றி பெறச் செய்யும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

மீனம் ராசிபலன்

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். திடீரென யாருடனும் ஒட்டாதீர்கள், அது வருத்தத்தைக் கொண்டு வரும். ஆபீசில் இன்று ஒரு நல்ல தகவல் உங்களை தேடி வரக்கூடும் சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று கடினமான நாள். ஆனால் பொறுமயுடனும் நிதானத்துடனும் செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

Facebook Comments