உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவை தானம் ..! மக்களே உஷார்!

Advertisement

Subscribe to our YouTube Channel

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.

ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?

அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சில உணவுப் பொருட்களை சரியாக தேர்ந்தெடுத்து வாங்காவிட்டால், அவற்றால் ஆபத்தை சந்திக்கக்கூடும்.

அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்த கட்டுரையில் நம் வீட்டில் இருக்கும் உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து, இனிமேல் உஷாராக இருங்கள்.

அனைத்து வகையான காளானுமே ஒரே மாதிரியானவை அல்ல. பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிட கிரிமினி காளான்கள் மிகச் சிறந்த ஒன்று.

ஆனால் சிலவகையான காளான்களில் ஆளைக் கொல்லும்படியான விஷம் இருக்கும். எனவே காளான் வாங்கும் போது பார்த்து வாங்குங்கள்.

தக்காளி என்றதும் அச்சம் கொள்ள வேண்டாம். தக்காளியின் இலைகளில் உள்ள க்ளைகோலாய்டு,

வயிற்று பிரச்சனைகளான வயிற்று பிடிப்புகள், வயிற்று உப்புசம் மற்றும் பதட்டம் போன்றவற்றை உண்டாக்கும்.
எனவே தெரிந்தோ தெரியாமலோ, அதன் இலைகளை உணவில் சேர்த்துவிடாதீர்கள்.

அனைத்து வகையான இனிப்பு வகைகளையும் தீயில் வாட்ட உதவலாம். ஆனால் அதன் இலைகள் விஷமிக்கவை.

இதை உட்கொண்டால், அது மூச்சு விடுவதில் சிரமம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் இறப்பையும் ஏற்படுத்தும்.

வேர்க்கடலை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். அப்படி அழற்சி இருக்கும் போது வேர்க்கடலையை உட்கொண்டால்,

அது மூச்சு விடுவதில் சிரமம், அதிர்ச்சி மற்றும் சுயநினைவை இழக்கச் செய்யும். இன்னும் தீவிர நிலையில் அது இறப்பைக் கூட ஏற்படுத்தும்.

எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கான அழற்சி என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கடல் சிப்பிக்கு அழற்சி கொண்டவர்கள், இதை அதிகம் உட்கொண்டால், அதன் தீவிரத்தினால் முச்சு திணறல் மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.

உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகள் இரண்டுமே விஷம் நிறைந்தவை. அதோடு பச்சை நிற உருளைக்கிழங்கை உட்கொண்டால்,

அதனால் இறப்பு கூட நேரலாம். ஆனால் இது மிகவும் அரிது.செர்ரிப் பழங்களின் விதைகளில் விஷமிக்க ஹைட்ரஜென் சையனைடு உள்ளது.

எனவே பார்த்து கவனமாக உட்கொள்ளுங்கள்.

முட்டை மற்றும் இறைச்சிகளை நன்றாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா,

இரைப்பையை பெரிதும் பாதிப்பதோடு, அந்த பாக்டீரியால் இரத்த குழாய்களில் நுழைந்தால்,

அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கி, உயிரையே பறிக்கக்கூடும்.

பாதாம் மிகவும் ஆரோக்கியமான நட்ஸ்களில் ஒன்று. ஆனால் பாதாம் கசப்பாக இருந்தால், அதை தூக்கிப் போடுங்கள்.

ஏனெனில் அந்த வகை பாதாமில் உயிரைப் பறிக்கும் சையனைடு உள்ளது.

ஆகவே பாதாமை முடிந்த அளவு லேசாக வறுத்து சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள டாக்ஸின்கள் நீங்கிவிடும்.

Facebook Comments