உலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை !

Subscribe to our YouTube Channel

தெலுங்கானாவின் மெகபூப்நகர் மாவாட்டத்தில் உள்ள மிகப் பழமையன ஆலமரத்துக்கு குளூகோஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தெலுங்கானாவின் மெகபூப் நகர் மாவட்டத்தில் உலகின் இரண்டாவது பழமையான ஆலமரம் அமைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்றான இம்மரம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் படர்ந்துள்ளது.

இந்த மரத்துக்கு வயது 700 வருடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த மரத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருவது வழக்கமான நிகழ்வாகும்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த மரத்தின் கிளைகளில் ஒன்று உடைந்து விழுந்தது இதை ஆராய்ந்ததில்

கரையான் அரிப்பு அதிகம் இருந்ததினால் கிளை உடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மரத்தின் வேறு சில இடங்களிலும் கரையான் இருந்துள்ளது.

தற்போது இந்த மரத்தைக் காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது/

இந்த மரத்தை தாவரவியல் நிபுணர்கள் பரிசோதித்தனர்.

தாவிரவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி கரையான்களை ஒழிக்கவும் மீண்டும் கரையான் வராமல் தடுக்கவும் மரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நலம் குன்றிய நோயாளிகளுக்கு குளுகோஸ் ஏற்றப்படுவது போல அதே முறையில் இந்த மரத்துக்கும் பூச்சிக் கொல்லி மருந்து ஏற்றப்பட்டு வருகிறது.


குளோரோபைரிடோஸ் என்னும் மருந்து நீருடன் கலக்கப்பட்டு மரத்தினுள் ஊசி மூலம் சொட்டு சொட்டாக செலுத்தப்பட்டு வருகிறது.

முதலில் தண்டுகளின் உள்ளே செலுத்தப்பட்ட பூச்சி மருந்தை மரம் ஏற்காததால் வெளியே வந்துள்ளது.

அதன் பிறகு மேலே கூறப்பட்ட படி ஊசிகளின் மூலம் சொட்டு சொட்டாக மருந்து ஏற்றப்பட்டு வருகிறது.

தற்போது மரம் அந்த மருந்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தாவரவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விரைவில் கரையான் அரிப்பில் இருந்து மரம் முழுமையாக விடுபடும் எனவும் தாவிரவியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இத்தனை செயற்கை வலுசேர்த்தலுக்கு பிறகு மரம் சீராக உள்ளது.

உயரதிகாரிகளுடன் பேசிவிட்டு மரத்தை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் மிகவும் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

700-year-old banyan tree gets treatment

700 வயதாகும் ஆலமரத்திற்கு தீவிர சிகிச்சை

 

Facebook Comments