வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள A/C அறையில் இருப்ப‍வரா நீங்க ?? இதை படிங்க!

Advertisement

Subscribe to our YouTube Channel

கோடைகாலத்தில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஏசி இருந்தாலும் அதன் பயன்பாடு சருமத்திற்கு தீங்கும் விளைவிக்கும்.

ஏசியின் பயன்பாடு அதிகரிக்கும்போது அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.

இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்துபோய் விடும்.

ஏனெனில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஏசியில் இருந்து வெளிப்படும்

செயற்கை குளிர் பெரும்பாலானவர்களின் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது.

அதிலிருந்து தற்காத்து கொள்ள அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.

உதடுகள் வறட்சி அடைவதை தவிர்க்க அதற்குரிய கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.

ஏசியில் இருப்பவர்கள் அறையின் வெப்பநிலையை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மிதமான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரும பாதிப்பின் தன்மை அதிகரிக்கும்.

ஒரு சிலருக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம்.

தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும்.

நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும்.

அவர்கள் அதிகமாக ஏசியை பயன்படுத்துவது உடல் நலக்கோளாறை அதிகப்படுத்திவிடும்.

A/C அறையில் இருப்ப‍வரா? – A/C-ஆல் ஏற்படும் விபரீத விளைவுகள் – எச்ச‍ரிக்கும் மருத்துவர்கள்…….

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்க ளுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும்.

இந்த வைட்டமின், கருவுறு தலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும்.

இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்.

இதற்காகத்தான் நம் முன்னோர் அதிகாலையில் சூரிய வணக் கம் செய்து வந்தனர்.

காலை 6 மணியில் இருந்து 7:30 மணி வரை உள்ள கதிரவனின் கதிர்க ளில், மனித உடலுக்கு அவசியமான வைட்டமின் டி கிடை க்கும்.

இந்த நேரத்தில் உடலில் சூரியனின் ஒளி படுமாறு நிற்பது அவசியம். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.

அப்படி உட் கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்க டைப்பு, தலைவலி, காது அடைத்தாற்போல இருப்ப து ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சிலருக்கு ஏசியின் குளிர்ந்த காற்று சுவாசப் பாதையை ரணமாக்கி விடும். கூருணர்ச்சி அதிகமுள்ளவர்கள் ஏசியை முடிந்த அளவு தவிர்த்து விட வேண்டும்.

சிலர் (விண்டோ) ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பார்கள். குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று

முக நரம் பை பாதிப்படையச் செய்து ‘பெல்ஸ் பேல்சி’ (Bell’s palsy) என்னும் முகவாதத்தை உருவாக்கும்.

காலையில் எழு ந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் வாய் ஒரு பக்கம் கோணிக் காணப்படும். ஏசியின் மிக அருகில் தூங்குவதைத் தவிர்த்து விட வேண்டும்.

வீட்டின் அருகே மரம், செடி, கொடிகளை வளர் த்து, காலையில் எழுந்து சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும்.

சூரிய ஒளி உடலில் படும்படி சில உடற்பயிற்சிகளை செய்ய வேண் டும். மூச்சுப் பயிற்சிக ளை முறைப்படி தினமும் செய்வது

உங்களது வாழ்நாளைக் கூட்டும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள் பழங்களை உண்ணலாம்.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியா ல் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த லாம்.

ஏசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏசி பகுதியில் வேலை பார்க்கும் நிர்பந்தம் உள்ளவர்கள், காதுகளில் ஏர் பிளக் அல்லது பஞ்சை வைத்து சமாளிக்கலாம்.

முடிந்த வரை முகத்தை ஏசிக்கு அருகில் வைக்காமல் தள்ளி அமர்ந்துகொள்ள வேண்டும்…”

‘‘ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பதால் சருமமானது எண்ணெய் பசை சுரப்பதை நிறுத்திவிடுகிறது.

எண்ணெய் பசை திரவங்களும் வியர்வையும் சரியான முறையில் சுரந்தால்தான் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன்இருக்கும்.

இல்லாவிட்டால் சருமம் உல ர்ந்து, வறண்டு விடும். ‘ப்ரீமெச்சூர்டு ஏஜிங்’ எனப்படும் வயதுக்குமுந்தைய மூப்புத் தோற் றம் ஏற்படும்.

ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும். கூந்தலி ன் வலுவும் குறையும்.

சருமத்தில் சுருக்கங்க ள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்து பவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும்.

அலுவ லகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால்,

அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும்.

இவர்களு க்கு கண்களில் வலி, எரிச்சல் இருக்கும். ‘ஆர்ட்டிஃபிசியல் டியர்ஸ்’ (Artificial tears) எனப்படும் செயற்கை கண்ணீர் இப்போது கிடைக்கிறது.

மருத்துவர் ஆலோசனையு டன் அதைப் பயன்படுத்தி, கண்கள் உலர் வதை சரிசெய்து கொள்ளலாம்.

சருமம் உலர்வதை தரமான மாய்ச்சுரைஸிங் க்ரீ ம் பயன்படுத்துவதன்மூலம் தடுக்கலாம்.

ஹைய லுரானிக் ஆசிட் (Hyaluronic acid) எனும் முகத்தில் சுரக்கும் திரவமே முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இந் த ஆசிட் அடங்கிய மாய்ச்சுரைஸிங் க்ரீம் இப்போது கிடைக்கிறது. மருத்துவர் ஆலோசனையுடன் அதைப் பயன்படுத்தி முகச்சுருக்கங் களைத் தவிர்க்கலாம்.

ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந் தால் நோய் இன்னும் தீவிர மாகும்.

இயற்கையான சூரிய ஒளியும், மாசு இல்லாத சுகாதாரமான காற்றும் நமது சருமத்துக்கு அவசியம் என்பதை மறந்துவிடக் கூடாது.

அதனால், தேவைக்கு ஏற்பவே ஏசியை பயன் படுத்திக் கொள்ளவேண்டும். ஏசியை அதிக நேரம் பய ன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

”ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடை ய ஆரம்பிக்கும். கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்க ங்கள் ஏற்படும்…

டாக்டர் எல்.ஆர்த்தி
(சருமநல நிபுணர்)

Facebook Comments