உலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்! காரணம் இது தான் !

Subscribe to our YouTube Channel

உலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 (Antonov An-225 Mriya) இன்று (புதன்கிழமை) காலை மத்தள ராஜபக்ஷ

சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி உபாலி கலன்சூரியா தெரிவித்துள்ளார்.


கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தள விமான நிலையத்தில்

அவசரமாகத் தரையிறக்கப்பட்டதுடன், அதன் ஊழியர்கள் தற்போது ஓய்வெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 எனும் சரக்கு விமானம்

இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய விமானங்களுள் அதிகபட்ச எடையாக 640 தொன்கள் எடை கொண்டதாகும்.

1980 களில் அப்போதைய சோவியத் ஒன்றிய நாடான உக்ரேன் இல் குறித்த அன்டோனோவ் விமானம் ஆறு ரேபோன் இயந்திரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இவ்விமானம் தரை இறங்கிய போது எடுத்த காணொளி இணைக்கப்பட்டுள்ளது .

Facebook Comments