” எங்க வீட்டு மாப்பிள்ளை ” நிகழ்ச்சியில் உண்மையில் பின்னணியில் நடப்பது என்ன ? புதிய கலாச்சார சீர்கேட்டை நோக்கி தமிழ் பெண்கள் !

Advertisement

Subscribe to our YouTube Channel

நடிகர் ஆர்யா தனது இயல்பான பேச்சு மற்றும் நடத்தைகளால் அனைவரையும் கவர்ந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருகின்றார்.

இதனால் தான் ஏனோ ஆண்களை விட பெண்களுக்கு இவரை அதிகம் பிடிகின்றது. பெண் இரசிகைகளே இவருக்கு அதிகம்.

பல்வேறு பட்ட திறமைகளை கொண்டிருந்த ஆர்யாவுக்கு தற்பொழுது வயது 37 ஆகின்றது.

எங்கு சென்றாலும் எல்லோராலும் முதலில் கேட்கப்படும் கேள்வி எப்போ கல்யாணம் ???
இதற்கு முற்று புள்ளி வைக்கவே திருமணம் செய்வதற்காக பெண்களை தேர்ந்தெடுக்கும்

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண் தேட ஆரம்பித்துள்ளார் .

கலர்ஸ் தொலைகாட்சியில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” எனும் நிகழ்ச்சியின் மூலம் தனது பெண் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார் ஆர்யா .


16 பெண்களுடன் தொடங்கிய மணப்பெண் தேர்வுப் போட்டி நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ போட்டியில் இப்போது 6 பெண்களே எஞ்சியுள்ளனர்.

ஒவ்வொரு சுற்றாக போட்டிகள் நடத்தி, ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறச் செய்து வருகிறார் ஆர்யா.

முடிவில் வெற்றி பெறும் ஒருவரைத் தான் ஆர்யா திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்யா, யாரைத் திருமணம் செய்ய போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிகழச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

அதாவது இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை மட்டுமே ஆர்யா மணக்க போகிறார்.

அது தான் அந்த போட்டியின் விதி .அப்போ இதுவரை அந்த போட்டியில் பங்குபற்றிய பெண்களின் நிலை ???

இந்த நிகழ்ச்சியில் அனைத்து பெண்களுடனுமே ஆர்யா மிகவும் நெருக்ககமாக பழகுகின்றார் .

வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் முதலிரவு மட்டும் தான் நடக்கவில்லை

அந்த அளவிற்கு ஆர்யா மற்றும் அதில் கலந்து கொள்ளும் பெண்களின் அணுகுமுறை காணப்படுகின்றது.

அந்த அளவிற்கு நெருக்கமாக பழகுகின்றார்.உதாரணமாக கட்டி தழுவுதல் ,முத்தமிடுதல்,டேடிங் செல்லுதல்.

இப்படி எல்லா பெண்களுடன் கூடி கும்மாளம் அடித்து விட்டு இறுதியில் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்தால் மற்ற பெண்களின் நிலை என்னவாகும் ???

அவர்களின் வாழ்க்கை நிலை என்ன ??

இதற்காக எல்லாம் பெண்களையும் மணக்க முடியாது …..

பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி ஒருவனுக்கு ஒருத்தி தான் .

ஆனால் இந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி இதற்கு எதிர்மாறானது தான்

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இதனை தொடர்ந்தும் கலர்ஸ் தமிழ் நடத்தி கொண்டே செல்கின்றது .

இந்த நிகழ்ச்சியை போலத்தான் இந்தியில் மல்லிகா செராவத் சுயம்வரம் எனும் பெயரில் மணமகனை தெரிவு செய்து

அவருடன் ஒருவருடம் மட்டும் தொடர்பில் இருந்து விட்டு பின்னர் அவரை கழட்டிவிட்டார் .

இதே போல் ஆர்யாவும் கழட்டிவிட மாட்டார் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை .

இன்றைய தொலைக்காட்சிகள் TRP அதிகரிக்க துணிந்து எதனையும் செய்ய முயல்வார்கள் .

ஆனால் இதில் பங்கு பற்றும் பெண்கள் மற்றும் அவரது குடும்பங்களும் தமது கலாச்சாரத்தை மறந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற அனுமதி கொடுத்துள்ளார்கள்.

இந்த நவீன சுயவரத்தால் தங்களது எதிர்காலத்தை எண்ணாமல் போலி சந்தோசத்திற்காக தங்களது வாழ்கையை தொலைக்க போகின்றார்கள்.

இதற்கு சமூதாயம் என்ன பதில் சொல்ல போகின்றது ????

Facebook Comments