72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்

Advertisement

Subscribe to our YouTube Channel

அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா(72).

இவர் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

அதன் பின்னர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்துள்ளார். அந்த நபருடன் அல்மேடாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பானது பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து அல்மேடாவும், கேரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

முதலில் இதற்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு எழுந்தது.

அதற்கு காரணம் அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசமாகும்.

இதனிடையே குடும்பத்தினரை ஒருவழியாக அவர்கள் சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டனர்.

கேரிக்கும், அல்மேடாவுக்கும் இடையில் 58 வயது வித்தியாசம் இருந்தாலும்

இருவரும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ள நிலையில்

இந்த உறவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் தவித்துள்ளனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதை ஏற்று கொண்டுள்ளனர். இப்பொழுது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்வதாக கூறுகின்றனர் தம்பதிகள்.

 

Facebook Comments
Total Page Visits: 6 - Today Page Visits: 4