இவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் !

Subscribe to our YouTube Channel

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முதல் மாடியில் வைத்து,

விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனத்தையே பதிலாக தந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது,

காமராஜர் பல்கலைக்கழக உதவு பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. குழுவினரின் ஒரு தரப்பு, காமராஜர் பல்கலைக்கழகம் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

பதிவாளர் மற்றும் தேர்வாணையர் அலுவலகங்களில் சோதனை நடத்திய அவர்கள், சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும்.

அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம்.

பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றார்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்தார்.

காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு

அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்

செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் உள்ள சி.பி.சி. ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர்

பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.

நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில்

செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு,

நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. இது பற்றி விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே

அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது.

அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறோம்.

விசாரணையின் போது அவர் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, இப்பிரச்சினையில் விசாரணை நடத்த கவர்னரால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.

அதிகாரி சந்தானம் குழுவினர் நேற்று அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்று பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நன்றி – மாலைமலர் இணையம்

Facebook Comments