ஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் !

Advertisement

Subscribe to our YouTube Channel

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் முருகன்,

ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு மே 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, 4 மாணவிகளை

தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக வெளியான ஆடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நிர்மலா தேவி மீது புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுடன் நிர்மலாதேவி பேசிய ஆடியோவில்,

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் பெயர் அடிபட்டதால், இது குறித்து ஆளுநர் விளக்கமளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சந்தானம் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சந்தானம் தலைமையிலான குழு, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தியது.

நிர்மலா தேவி விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின்படி பேராசிரியர் முருகன்,

ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் சிபிசிஐடி போலீசார் விசாரனை நடத்தினர்.

இருவரது செல்போன் எண்ணில் உள்ள தொடர்புகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே திருச்சுழி அடுத்துள்ள கேத்தநாயக்கன்பட்டியில் உள்ள கருப்பசாமியின் மைத்துனரிடம் இருந்த செல்போனைக் கைப்பற்றினர்.

அந்த செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்கள் யாருடையது என்கிற கோணதிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

புத்தாக்க பயிற்சியில் பங்கேற்ற பேராசிரியர்களிடமும் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

முருகன், கருப்பசாமி இருவரது சிபிசிஐடி காவல் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில்,

இன்று அவர்கள் சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமிக்கு மே 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டுள்ளார்.

நிர்மலாதேவி விவகாரத்தில் தனது கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக முருகனின் மனைவி பேட்டி…

நிர்மலா தேவி விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கியமான நிர்வாகிகளை காப்பாற்ற தன் கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.

முழுமையான விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை தெரியவரும்.

நிர்மலா தேவிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொண்ட போது

கருப்பசாமியுடன் இணைந்து தங்குவதற்கு இடம் வசதி செய்து கொடுத்தது மட்டுமே உண்மை.

இதில் நிர்மலாதேவியை கல்லூரிக்குள் அனுமதித்தவர்கள், அவரை கல்லூரி வளாகத்தில் வைத்து சுற்றி காண்பித்தவர்கள்,

என பலரை காப்பாற்ற எனது கணவரை பலிகடா ஆக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக என் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்களது குடும்பத்தினர் தலைமறைவாக இருக்க வேண்டும் என சிலர் போனில் மிரட்டினர்.

குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக எனது கணவர் குற்றவாளி ஆக்கப்படுகிறார்,

எங்களது குடும்பத்திற்கு மிரட்டல் வருவதால் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கருப்பசாமிதான் நிர்மலா தேவியை எனது கணவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தவறு செய்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தடயங்களை அழித்துவிட்டனர். புத்தாக்க பயிற்சி நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும்.

மதுரை காமராஜ் பல்கலையில் புத்தாக்க பயிற்சியில் பங்கேற்க ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மூலம் கணவர் முருகனிடம் நிர்மலா தேவி அணுகினார்.

அதற்கு கணவர் முதலில் மறுத்தார். பின் அவர் பயிற்சியில் பங்கேற்க அனுமதித்தது யார். தங்க அறை கேட்பது தொடர்பாக கணவரை சந்தித்துள்ளார்.

கிளார்க்கை சந்திக்கும்படி நிர்மலா தேவியை கணவர் அனுப்பி விட்டார். அவருடன் தஞ்சை பேராசிரியை ஒருவர் உட்பட மூவர் தங்கினர்.

‘அவருக்கு ‘ஏசி’ அறை ஒதுக்கப்பட்டதாக சிலர் கூறியதாக கணவர் என்னிடம் தெரிவித்தார். அது யார்? இதுகுறித்து விசாரிக்கப்பட்டதா?

சஸ்பெண்ட் ஆன பின் கருப்பசாமி மூலம் கணவரை நிர்மலா தேவி சந்தித்து, “இதில் இருந்து காப்பாற்றுங்கள்,” என கேட்டார்.

இது சம்மந்தமாக பேசக்கூடாது. கல்லுாரி நிர்வாகத்திடம் போய் பேசுங்கள்,’ என கணவர் அவரை அனுப்பி விட்டார்.

இதுதவிர அவருக்கும், நிர்மலா தேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

 

Facebook Comments
Advertisement