அழிவை ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம் ரஷ்யா கையில்: 320 அடிக்கு மேல் சுனாமி ஏற்படும் அபாயம்!! அதிர்ச்சியில் சர்வதேசம் !

Subscribe to our YouTube Channel

ரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்தக் கூடிய சுமார் 320 அடிக்கு மேல் சுனாமி அலைகலை ஏற்படுத்தும் அளவிற்கு

அதிபயங்கரமான அணு ஆயுதம் உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மாஷ்கோவில் கடந்த மாதம் நடந்த மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யாவிடம்

பலமான பல அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி அது தொடர்பான வீடியோவை பெரிய திரையில் காண்பித்தார்.

அப்போது ஏவுகணை கப்பல், புதிய வகையான பல அதிரடி ஏவுகணைகள்

மற்றும் நீரில் இருந்தபடியே அழிவை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதம் ஒன்றைப் பற்றியும் கூறினார்.

பல மாதங்களாக இது குறித்து தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் இயற்பியல் மற்றும் அணு ஆயுத ஆராய்ச்சியாளரான Rex Richardson

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றி ரஷ்யாவின் அந்த புதிய அணு ஆயுதம் பற்றிய சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அதை அவர், புடினின் அழிவை ஏற்படுத்தக் கூடிய இயந்திரம் என்றும் இதை Status-6 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீருக்கடியில் சுமார் 50 மெகாடன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த அணு ஆயுதம் 328

அடிக்கு சுனாமி அலைகலை உண்டாக்கி அழிவை ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான ஆயுதம் என்றும்,

இதனால் கடலோர பகுதிகள் முற்றிலும் அழிவதுடன், அருகிலிருக்கு நகரங்களும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த Status-6-ஆனது 6,200 மைல் தூரம் வரை செல்லக் கூடியது எனவும்
அதன் வேகம் நீரின் உள்ளே 100.8 கி.மீற்றர்

வேகத்தில் என்பதால் எதிரிகள் இதை அடையாளம் கண்டாலும் அவ்வளவு எளிதில் இதை வீழ்த்திவிட முடியாது.

இதில் சுமார் 20 மெகா டன் முதல் 50 மெகா டன் வரை அணு ஆயுதங்களை நிரப்பி கடற்கரையோரப் பகுதியில் தாக்குதலை நடத்தினால்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி வந்த போது 16,000 மக்கள் இறந்தார்களே அந்த அளவிற்கு இருக்கும் இதன் தாக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.


நீருக்கடியிலே கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாக கூறப்படும் இந்த Status-6

அமெரிக்காவின் கடலோரப்பகுதியில் வெடிப்பை உண்டாக்கினால் கடலோரப் பகுதிகள் முற்றிலும் அழிவதுடன்

குறிப்பாக Los Angele அல்லது San Diego பகுதிகள் இருக்கும் இடம் தெரியாமலே போகும் எனவும் கூறப்படுகிறது.

Facebook Comments