மேலாடையை அவிழ்த்துப் போராடியது ஏன்? நடிகை ஸ்ரீ ரெட்டி பளீர்

Subscribe to our YouTube Channel

”என்னுடைய போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அதுவே பொது இடத்தில் என்னை நானே நிர்வாணப்படுத்திக்கொண்டு போராடும் முடிவை எடுக்க தள்ளியது”

என தனது போராட்டம் குறித்து கூறுகிறார் தெலுகு திரைப்பட நடிகை ஸ்ரீ ரெட்டி மல்லிடி.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்த்து கடந்த வாரம்

ஐதராபாத் ஃபிலிம் நகர் பகுதியில் உள்ள சினிமா கலைஞர்கள் சங்கத்தின் முன்பு ஸ்ரீ ரெட்டி மேலாடை இன்றி அமர்ந்தார்.

தனது குரலை எல்லோரும் கேட்கச் செய்யவும்,

தனது கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்க வைக்கவும் இந்த ஒரு வழி மட்டுமே மீதமிருந்தது என ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

”சினிமா துறையில் சிலர் என்னிடம் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு கேட்கும்போது

நான் ஏன் எனது ஆடைகளை அவிழ்த்து கொண்டு பொதுமக்கள் முன் செல்லக்கூடாது? ” என அவர் கேள்வி எழுப்புகிறார்.

பிராந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக பணியைத் துவங்கிய ஸ்ரீரெட்டி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சினிமாவுக்குள் நுழைந்தார்.

சில தெலுகு திரைப்படங்களில் சிறு கதாபாத்திர வேடங்களில் நடித்த அவர்,

தனது மேலாடையை அவிழ்த்துக் கொண்டு போராடியதன் மூலமாக கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டும் அவர் அதற்கான எந்த ஆவணங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை

மேலும் காவல் துறையில் புகார் செய்யவும் இல்லை.

ஸ்ரீ ரெட்டி மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கவும் கவனம் ஈர்ப்புக்காக இந்த விஷயங்களை செய்தாரா

அல்லது மலிவான விளம்பரத்துக்காக இப்படியொரு நடவடிக்கையை எடுக்க

ஊடகங்களால் தூண்டி விடப்பட்டாரா என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

டோலிவுட் என அறியப்படும் தெலுகு திரைப்பட துறையானது இந்தியாவில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சினிமா துறையாகும்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் வருடாந்திர அறிக்கையின்படி 2015 -2016ஆம் ஆண்டு

ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை 269 ஆகும்.

2017ஆம் ஆண்டில் பிபிசிக்கு பேட்டியளித்த தெலுகு திரைப்பட நடிகை மாதவி லதா, பாலியல் துன்புறுத்தலானது நடிகர் நடிகைகளிடம்

” நாங்கள் உங்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அதற்கு கைமாறாக நீங்கள் எங்களுக்கு என்ன செய்வீர்கள்?”

என கேள்வி கேட்பதில் இருந்து துவங்குகிறது என்று தெரிவித்தார்.

“எல்லா சமயங்களிலும் சினிமா துறையில் ஆண்களிடம் இருந்து மட்டும் தொந்தரவு வருவது கிடையாது.

சில சமயங்களில் பெண்களிடம் இருந்தும் அபாயகரமான தொந்தரவுகள் வருவதுண்டு என்று கூறிய அவர்,

தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி அவரது கணவரின் பாலியல் ரீதியான கோரிக்கைகளுக்கு

உடன்பட வேண்டும் என தன்னிடம் கூறியதாக விவரித்தார். “வளர்ந்துவரும் பாடலாசிரியர் ஸ்ரேஷ்டா.

ஹாலிவுட்டில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகள்

நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு கட்டுரை மூலம் வெளிவந்தது. அப்போதுமுதல் ஹாலிவுட்டில் உள்ள நிறைய பெண்கள் முன்வந்து

தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது குறித்து தெரிவிக்க துவங்கினார்கள். ஹார்வி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

தற்போது சினிமா கலைஞர்கள் சங்கத்தில் இருந்து ஸ்ரீ ரெட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் சிவாஜி ராஜா பிபிசியிடம் பேசுகையில், நடத்தை காரணமாக ஸ்ரீ ரெட்டி தடை செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

அந்த பெண் ஏன் காவல்துறையிடம் புகார் தரவில்லை? ஆதாரம் இல்லாமல் விளம்பரத்துக்காக அவர் அப்படிச் செய்தார் எனத் தெரிவித்தார்.

தெலுகு திரைப்பட தயாரிப்பாளர் டகுபதி சுரேஷ் பாபு பேசுகையில்

”தனது எதிர்ப்பை காட்ட ஸ்ரீ ரெட்டி நடந்து கொண்ட விதமானது இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இழுக்கை ஏற்படுத்திவிட்டது” என தெரிவித்துள்ளார்.

ஃபிலிம் ஸ்டூடியோக்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீ ரெட்டி,

ஃபிலிம் ஸ்டூடியோக்களில் சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் நடைபெறுவதாகவும் தாம் கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி விவகாரத்துக்கு பல தரப்பில் இருந்தும் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

தனது எதிர்ப்பை காட்ட ஸ்ரீ ரெட்டி தேர்ந்தெடுத்த விதமானது சினிமா துறையில் பெண்கள் பாலியல் சுரண்டலுக்குள்ளாவதை

மீண்டும் முக்கிய விவாதங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

Facebook Comments